நிஸ்பஹானின் மின்னல்வேகம் - அசந்துபோயுள்ள இலங்கையர்கள் -
– அனஸ் அப்பாஸ் –
கணக்காளரான மர்ஹூம் A.C.M. ரவூப் – S.F. பஹ்ரியா தம்பதிகளின் இறுதிப் புதல்வர் M.R.M. நிஸ்பஹான் அண்மைக் காலமாக சுயாதீன தொலைக்காட்சி நேயர்கள் மத்தியில் மிகவும் பிரசித்தம்பெற்று வருகின்றார். நேயர்கள் மட்டுமன்றி பல மேடைகளைக் கண்ட நிகழ்ச்சி நடுவர்களையே தனது கணித நுட்பத் திறனாலும், கணிப்பானை விட மிக விரைவான, அரை செக்கனுக்கும் குறைவான நேர பதில்களாலும் மௌனிக்க வைக்கின்றார்.
நாவலப்பிட்டிய சென்மேரிஸ் கல்லூரியில் தனது கல்வித் தேவையை பூர்த்தி செய்த நிஸ்பஹான் தன்னுள் இருந்த திறமையை அடையாளம் கண்ட முதல் சந்தர்ப்பம் தனது வகுப்பறையில் இடம்பெற்ற வாய்ப்பாடு கேள்வி-பதில் போட்டியில் முதலிடம் பெற்று மகிழ்ந்த நிகழ்வாகும். 2013 ஆம் ஆண்டு புதிய இலகு கணித நுட்பத்தை கண்டுபிடித்து, இதற்கு கணித ஆசிரியையின் கரங்களால் விஷேட சான்றிதழும் பெற்றார் நிஸ்பஹான்.
க.பொ.த (சா/தர) பரீட்சையில் கணித பாடத்தில் “A” சித்தி பெற்ற நிஸ்பஹான், மனக் கணித நிபுணர்களைப் பற்றித் தேடவும், மனக் கணித நுட்பங்களை ஆராயவும் சுமார் ஒரு வருட காலத்தை ஈடுபடுத்தினார்.
2014 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் ஆர்த்தபெஞ்சமின் அவர்களின் மனக் கணித காண்பித்தல் நிகழ்ச்சி மற்றும் அவர்களது நுட்பங்களை ஒப்பிடுகையில் மனக் கணித திறனானது வெறும் நுட்பத்தோடு மாத்திரமல்லாமல் தொடேர்ச்சையான கடும் பயிற்சியின் பிரதிபலன் என்பதை அறிந்து, ஆறு மாதங்கள் மனக் கணித பயிற்சியில் தன்னை ஈடுபடுத்தினார் நிஸ்பஹான்.
பின்னர் நாவலப்பிட்டிய நகரில் தனது திறமைகளை வெளிக்காட்டிய நிஸ்பஹான், இலத்திரனியல் ஊடகங்களிலும் (ரூபவாஹினி தேசிய தொலைக்காட்சி அலைவரிசை) மனக் கணித நிகழ்ச்சிகளை காண்பித்து வெளி உலகுக்கு தனது திறனை வெளிக்காட்டினார்.
எனினும், அப்போது பொருத்தமான தளம் அமையாமை, குறைவான வாய்ப்புக்கள் போன்ற அசௌகரியங்களை எதிர்கொண்டார்.
பின்னர், 2017 ஆம் ஆண்டு “Youth With Talent” “Generation Next” போன்ற தொலைக்காட்சி போட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மெருகேறிய தனது திறனை மிளிரச் செய்த நிஸ்பஹானின் திறமை வேகமாக பாரெங்கும் பரவ ஆரம்பித்தது. யூடியுப் தளத்திலும் இவரது காணொளி பதிவாகியுள்ளதால் ஆச்சர்யத்தின் விழிம்பில் இருந்துகொண்டு ஒரு அதிசய மனிதனை புகழ்வது போன்று கருத்துக்களும், பாராட்டுக்களும் அவரை குவிகின்றது.
“மூத்த சகோதரன் நிஸ்மி, அமானா வங்கியில் பணிபுரிகின்றார். இரண்டாமவர் நிஷாட், கொழும்பில் பட்டயக் கணக்காளர். தையல் வேலைகளில் ஆர்வமுள்ளவராக மூன்றாவது சகோதரி நிரோஷா காணப்படுகின்றார்.” என தனது உடன்பிறப்புக்களை அடையாளப்படுத்துகின்றார் நிஸ்பஹான்.
கணிப்பு முறைகளை பயிற்சி செய்யும் கருவிகள் தயாரித்தல், புதிய மனக் கணிதம் சார் நுட்ப கண்டுபிடிப்பு, “Magical Maths Trick” நுட்ப பயிற்சி மூலமான அரை இறுதி சுற்று வெளிப்படுத்தல்கள், 2 முதல் 5 வரையான இலக்கங்கள் கொண்ட எண்களை மனதால் குறுங்காலத்தில் கணித்தல், வருடத்துடன் பிறந்த திகதியைக் கூறினால் வேகமாக பிறந்த தினம் என்ன நாள் என்பதை கணித்தல், 3 இலக்கங்கள் கொண்ட எண்களை 2 இலக்கங்கள் கொண்ட இலக்கங்களால் வகுத்தல், விடை தசமத்தில் வந்தாலும் மிக நேர்த்தியாக குறிப்பிடல் என்பன இவரது அபார திறன்கள்.
எதிர்காலத்தில் இந்நுட்பத்தை மாணவர்கள் மத்தியில் பிரபல்யப்படுத்தும் முகமாக தேசிய அளவில் பயிற்றுவித்து போட்டிகளை நடாத்த எண்ணம் கொண்டுள்ளார் நிஸ்பஹான். மேலும், கணிதம் சார் பல உபகரங்களை தயாரிப்பதுடன், கணித விளையாட்டுக்களையும் அறிமுகம் செய்ய எண்ணியுள்ளார். “Asia’s Got Talent” சர்வதேசப் போட்டியில் பங்கெடுப்பது மட்டுமன்றி, 5 Digits Multiplication 2 Numbers பிரிவில் உலக சாதனையை நிலை நாட்டவும் உறுதி பூண்டுள்ளார் நிஸ்பஹான்.
Multi Culculation Solution – மனதால் கணித்தல், உ+ம்: 23*684+789+47/79= ?
இவ்வாறான கணிப்புக்களுக்கே செக்கனுக்கும் குறைவான நேரத்தில் நிஸ்பஹான் பதில் சொல்கிறார்.
தனது வெற்றிக்கான சூத்திரங்களை,
INNOVATIVE – புதுமை
EXPRESSION – ஆச்சர்யப்படத்தக்க
UNIQUE – தனித் தன்மையாக
குறிப்பிடுவதோடு, ஒருவரின் திறமை CUTE ஆக இருக்க வேண்டும் என்கின்றார்.
C – Creativity (புத்தாக்கம்)
U – Useful (பயன்மிக்கது)
T – Talent (திறன்மிக்கது)
E – Expression (ஆச்சர்யப்படத்தக்கது)
ஆசிரியை H.M. மஸீzனா, ஊக்குவித்த ஏனைய ஆசிரியர்கள், கண்டி மாவட்ட வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் (கணிதம்) திரு. தமிழ்செல்வன் ஐயா, கல்லூரி அதிபர் S.H.M. பவ்சான் சேர், திரு. R.M. முனாஸ் (SLBC Announcer – Old), அனுசரணையாளர் திரு. இக்ராம், ஊர் அரசியல்வாதிகள், நண்பர்கள், குடும்பத்தார், இந்நாட்டு மக்கள், Youth with Talent இன்’ பொறுப்பாளர்களான ITN மற்றும் தேசிய இளைஞர் சேவை மன்றத்திற்கும், மீள்பார்வை பத்திரிகைக்கு தகவல் கொடுக்க உதவிய சகோ. இஸ்பஹான் இற்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றார் நிஸ்பஹான்.
1994 ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி பிறந்த நிஸ்பஹான் இன்னும் 7 – 8 மாதங்களில் கின்னஸ் சாதனைக்கான தனது முன்னெடுப்புக்கு காலம் குறித்துள்ளார். 2010 ஆம் ஆண்டு அமெரிக்கரொருவர் 76 செக்கனில் படைத்த சாதனையை முறியடிக்க தன்னால் முடியும், ஆனால், கின்னஸ் குழுவை இங்கு வரவழைக்க தேவையான நிதியை பெற்றுக்கொடுக்க சமூகம் முன்வர வேண்டும் என்று ஊக்கத்துடன் கூறுகின்றார்.
இதுவரை தான் வெளிப்படுத்திய மனக் கணித நுட்ப வித்தைகளை விட வித்தியாசமானதொன்றை மார்ச் மாதம் 10 ஆம் திகதி தொலைக்காட்சியில் இடம்பெறும் Youth with Talent இறுதிச் சுற்றில் வெளிப்படுத்தி முழு தேசத்தினதும் பிரம்மிப்பை இன்னும் அதிகரிக்க அமைதியாக பயிற்சி பெறுகின்றார் நிஸ்பஹான். “இந்த தேசத்திற்கே அதிஷ்டம் இவர்” என ஏற்கனவே பலமுறை மொழிந்தன அந்நிகழ்ச்சி நடுவர்களின் நாவுகள்.
இலங்கை கண்டுபிடிப்பாளர்கள் ஆணையத்தில் “Manual Mind Calculator” “Easy Mathemetical Techniques” “ Set the Coordinate” ஆகிய மூன்று சாதனைகளை நிகழ்த்திய பெருமைக்குரிய பெயராக “நிஸ்பஹான்” ஜொலிக்கிறது.
Masha Allah YA ALLAH Gives to him extreme knowledge
ReplyDeleteMasha Allah YA ALLAH Gives to him extreme knowledge
ReplyDeleteநிஸ்பஹானின் அயராத முயற்சியும் உழைப்பும் தான் அவரை இந்த சாதனை வீரனாக நாட்டுக்கு அவசியம் தேவையான ஒரு பிரஜையாக மாற்றியிருக்கின்றது. அதே திறமையை எங்கள் இளைஞர்கள், யுவதிகள் பின்பற்றி அயராத உழைப்பையும் கணிதத்தில் ஊக்கமும் காட்டினால் நாட்டில் எத்தனையோ நிஸ்பஹான்கள் உருவாகும் என்ற பாடத்தையும் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும்.
ReplyDeleteAll the best for the Guinness record,,
ReplyDeleteMasahallah.
ReplyDeleteReally happy to see my student
ReplyDeleteCongratulations. Wish you all the best in future.
ReplyDeleteAll the best brother keep go
ReplyDeleteMasha Allah. Mathematics is a passion. With the correct guiding many among us can rise to the fames like him.
ReplyDeleteCongratulation
ReplyDeleteVery well written and factual. Nisfahan is a great gift to our mother land. To me, he himself is a man of special power endowed with such an extraordinary talent. He drenched millions of people across the country and the world with his Mathematical magic. These wonderful youngsters are our future. Many congratulations to Nisfahan and his family.
ReplyDeleteVery well written and factual. Nisfahan is a great gift to our Mother land. To me, he himself is a man of special power endowed with such an extraordinary talent. He drenched millions of people across the country and world with his Mathematical magic. These wonderful young people are our future. Many congratulations to Nisfahan and his family. - Razeen Mohamed
ReplyDeleteVery well written and factual. Nisfahan is a great gift to our Mother land. To me, he himself is a man of special power endowed with such an extraordinary talent. He drenched millions of people across the country and world with his Mathematical magic. These wonderful young people are our future. Many congratulations to Nisfahan and his family.
ReplyDelete