ஜனாதிபதிக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைபாடு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் நாளைய தினம் (9) முறைபாடு செய்யவுள்ளதாக நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.
மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில் இலங்கைப் பிரஜை அல்லாத நபர் ஒருவரை மத்திய வங்கியின் ஆளுனராக தெரிவு செய்தமை மற்றும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சர் என்ற ரீதியில் குறித்த அமைச்சில் நடைபெறும் மோசடி மற்றும் ஊழல் தொடர்பாகவே ஜனாதிபதிக்கு எதிராக முறைபாடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அத்துடன், மகாவலி அபிவிருத்தி அமைச்சின் பிரதி அமைச்சர் அநுராத ஜயரத்ன, மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் முன்னாள் தலைவர், மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பிரதி பணிப்பாளருக்கு எதிராகவும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைபாடு செய்யப்படவுள்ளதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.
Post a Comment