Header Ads



காலநிலை கைகொடுக்கவில்லை, றிசாத்தை ஏற்ற விமானப்படை மறுப்பு - அம்பாறை பயணம் ரத்து

அம்பாறையில் நமது சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஆராய, அங்கு  செல்லவிருந்த அமைச்சர் றிசாத், காலநிலை சரியில்லை என்பதால் அவரை ஏற்றிச்செல்ல விமானப்படை  மறுத்துவிட்டது.

அமைச்சர் றிசாத்துடன் அமீரலி, நவ்சாத் உள்ளிட்ட மற்றும் சில பிரமுகர்கள் செல்லவிருந்தனனர்.

இதன்பொருட்டு அமைச்சர் றிசாத்துடன் இவர்கள் சகலரும் ரத்மலான வüமானநிலையம் சென்றுள்ளனர். எனினும் காலநிலை சீர்கேட்டால் விமான பயணமோ அல்லது கெலிகெப்படரோ பறக்க முடியாது என விமானப்படை கூறியுள்ளது.

இந்நிலையில் அமைச்சர் றிசாத் ஏமாற்றத்துடன் கொழும்பு திரும்பியுள்ளார். தரைவழியாக அமைச்சர் றிசாத் விரைவில் அம்பாற பயணிப்பார் என அறியவருகிறது.

1 comment:

Powered by Blogger.