சிறிலங்கன் விமான, சேவையின் முக்கிய அறிவிப்பு
சிறிலங்கா விமான சேவைக்கு சொந்தமான சில விமானங்களின் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
கொச்சினில் பறவை ஒன்று விமானத்தில் மோதியமை உள்ளிட்ட காரணங்களால், இரண்டு விமானங்களில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறினால் இந்தநிலை உருவாகி இருக்கிறது.
சிறிலங்கன் விமான சேவையின் ஊடக அறிக்கை ஒன்றில் இந்தவிடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக விமானப் பயணத்துக்காக பதிவு செய்துள்ளவர்கள், முன்கூட்டியே தங்களைத் தொடர்பு கொண்டு சேவை இடம்பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு சிறிலங்கன் விமானசேவை அறிவுறுத்தியுள்ளது.
இதற்காக 01 973 319 79 என்ற இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
Post a Comment