"ரணில் பதவியேற்று சில தினங்களிலேயே, முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத் தாக்குதல்"
அம்பாரையில் பொலிஸ் பாதுகாப்புடன் நடை பெற்ற முஸ்லிம்கள் மீதான தாக்குதல் பற்றி பிரதமர் உடனடி விசாரணைகளை நடத்துவதுடன் பாதிக்கப்பட்ட பள்ளிவாயல் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், நபர்களுக்கும் உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என உலமா கட்சி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை கேட்டுக்கொண்டுள்ளது.
இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீதினால் பிரதமர் ரணிலுக்கு அனுப்பி வைத்துள்ள தொலைநகலில் தெரிவித்துள்ளதாவது,
பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டின் பிரதமராக இருப்பதுடன் சட்டம் மற்றும் ஒழுங்குக்கான அமைச்சராக நியமிக்கப்பட்டதன் மூலம் நாட்டில் இனவாத செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்படும் என எதிர் பார்த்தோம். ஆனால் பதவியேற்று சில தினங்களிலேயே அம்பாரையில் முஸ்லிம்களுக்கெதிராக அரச படைகளின் ஆசீர்வாதத்துடன் கலவரம் நடை பெற்றுள்ளதானது பிரதமரின் பெயருக்கு பாரிய அபகீர்த்தியாகும்.
இந்தக்கலவரத்தின் பின்னணியில் மஹிந்த தரப்பினர் இருக்கலாம் என கூறி சிலர் விடயத்தை திசை திருப்ப முணைவது முஸ்லிம்களுக்கு செய்யும் துரோகமாகும். அவ்வாறு மஹிந்த தரப்பினர் ஈடுபட்டிருந்தால் அவர்களை மிக இலகுவாக கைது செய்திருக்க முடியும் என்பதுடன் பொலிசார் துப்பாக்கி பிரயோகம் செய்தாவது கலவரக்காரர்களை கட்டுப்படுத்தியிருக்க முடியும்.
ஆகவே இந்தக்கல்வரத்துக்குரிய முழு பொறுப்பையும் ஆளும் அரச கட்சியான ஐக்கிய தேசிய கட்சியும் பிரதமருமே ஏற்க வேண்டும். அத்துடன் அம்பாரை முஸ்லிம்களுக்கு முழு பாதுகாப்பும் வழங்குவதுடன் அம்பாரை பள்ளிவாயலுக்கு முஸ்லிம் பொலிசாரை பாதுகாவலாக நிறுத்த வேண்டும் எனவும் உலமா கட்சி பிரதமரை கேட்டுக்கொள்கிறது.
Post a Comment