இன்றைய அமைச்சரவையில் எடுத்த, முக்கிய தீர்மானம்
பாடசாலை உயர்தர மாணவர்களுக்கும் பாடசாலை ஆசிரியர்களுக்கும் ‘டெப்லட்’ வகை கணினிகளை வழங்கும் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த வரவு-செலவுத் திட்டத்தின்போது ஆசிரியர், மாணவர்களுக்கு டெப்லட்களை வழங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, 36 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் 160 ஆயிரம் மாணவர்களுக்கும் டெப்லட்கள் வழங்கப்படவிருந்தன.
இந்தத் திட்டத்துக்காக நான்கு பில்லியன் ரூபா ஒதுக்குவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் இந்தத் திட்டத்தைத் தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டதையடுத்து, அதற்கு இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது.
நாட்டின் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அணிவகுப்பில் மடிக் கணினிகளுடனான நடனம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததும் அது இணைய வழி வெளியானதையடுத்து கடும் எதிர்ப்புகளைச் சம்பாதித்ததால் அணிவகுப்பில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment