முஸ்லிம்களுக்கு பாதுகாப்பற்ற நாடாக இலங்கை - சர்வதேச மன்னிப்புச் சபை பிரகடனம்
முஸ்லிம்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளின் வரிசையில் இலங்கையின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அண்மையில் சர்வதேச மன்னிப்புச் சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் பௌத்த தேசியவாத கொள்கைகள் கடந்த ஆண்டில் வலுப்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்ட்டுள்ளது.
கடந்த ஆண்டில் உலக நாடுகளில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறுபான்மை இனத்தவர்களுக்கு மிகவும் ஆபத்தான பிராந்தியங்களில் ஒன்றாக தெற்காசியா கருதப்படுகின்றது.
அரசாங்கங்கள் உரிய வகையில் சிறுபான்மை மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பூசாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரோஹினிய முஸ்லிம்கள் மீது பௌத்த கடும்போக்காளர்கள் தாக்குதல் நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நூஹுக்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான்; ஆகவே (நபியே) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்றாஹீமுக்கும், மூஸாவுக்கும் , ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால்: “நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்” என்பதே - இணைவைப்போரை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது அவர்களுக்குப் பெரும் சுமையாகத் தெரிகிறது - தான் நாடியவர்களை அல்லாஹ் தன் பால் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான் - (அவனை) முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான்.
ReplyDelete(அல்குர்ஆன் : 42:13)
www.tamililquran.com