சவுதியில் இப்படியும் நடந்தது (அதிரவைக்கும் உண்மைச் சம்பவம்)
சென்ற வெள்ளிக்கிழமை சவூதி அரேபிய ரியாத் நகரில் பள்ளிவாயல் ஒன்றில் குத்பா பிரசங்கத்தை அரேபிய இமாம் ஓருவர் சொற்பொழிவாற்றிக் கொண்டிருக்கையில்,
அவரது சொற்பொழிவுக்கு செவி சாய்த்துக் கொண்டிருந்த பலரும், கண்ணீர் சிந்திக் கொண்டும் மூக்கை சிந்தவும் ஆரம்பித்து விட்டிருந்தனர் .
அச்சமயம், அவருக்கருகில் முதல் வரிசையில் இருந்த ஓரு அரேபிய இளைஞன் தேம்பி தேம்பி அழத் தொடங்கி விட்டிருந்தான். கூடவே பிரசங்கம் செய்து கொண்டிருந்த இமாம் அவர்களும் தனது உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாதவராக அழுகையினூடாகவே பிரசங்கம் செய்து கொண்டிருந்தார்.
இதற்கான காரணம் இதுதான்.
சவூதி அரேபிய நாட்டில் போதை வஷ்துக்கள்,மது, மாது போன்ற மார்க்கத்தில் தடை செய்யப்பட்டவைகள் அந்நாட்டு அரசாங்கத்தினாலும் இன்று வரை தடை செய்யப்பட்ட ஒன்றாகவே உள்ளது...இதனால் இந்நாட்டு இளைஞர்களில் சிலர் இவைகளைப் பெற்று போதையில் தம்மை மிதக்கச் செய்துகொள்ளவும் சல்லாபங்களில் ஈடுபடவும் தமது வாராந்த விடுமுறை நாட்களில் தமது அண்டைய நாடான பஹ்ரைன் நாட்டிற்கு சென்று வருவதை பழக்கப்படுத்திக் கொண்டிருந்தனர். ஏனெனில் பஹ்ரைன் நாட்டின் அரசாங்க சட்டத்தில் இதற்கு தடை ஏதும் இல்லை என்பதாகும்.
பஹ்ரைன் நாடானது சவூதி அரேபிய ரியாத் நகரில் இருந்து சுமார் 450 KM தொலைவில் உள்ளது. இத்தொலைவை வெறும் மூன்று மணி நேரத்திற்கும் குறைவான நாளிகைகளில் இவ்விளைஞர்கள் படுவேகமாக வண்டியை ஓட்டி அடைந்து விடுவர்.
அத்துடன் இவ்விரு நாடுகளினதும் நல்லிணக்கத்திற்கு அமைய தத்தமது நாடுகளின் எல்லைகளில் 20 நிமிட கால அவகாசத்திற்குள்ளும் மிகவும் குறைந்த கட்டணத்திலும் வண்டியில் உற்கார்ந்தவாறே விஷாக்களைப் பெற்றுக் கொள்ள முடியுமானதாக இருக்கும்..
இதனது தருவாயில், அவ்விளைஞனும் அவனது சக நண்பர்களில் மூவரும் வியாழன் அன்று இரவு தமது விடுமுறை தினங்களை போதைகளிலும், கலியாட்டங்களிலும் மிதப்பிற்க எண்ணி தங்களது பிரயாணத்தை அமைத்துக்கொண்டு வாகனமொன்றில் மிகவும் குதூகலமான முறையில் பயணித்துக்கொண்டிருக்கையில்......
மேலே குறிப்பிடப்பட்டுள்ள இளைஞன் சற்று நேரம் அசதியில் சிறு தூக்கத்திற்கு ஆளாகியுள்ளான்.
அப்போது அவன் கண்ட கனவுகளினூனாக “ இன்னும் 70 கிலோ மீட்டர் தொலைவில் நரகம்உ ள்ளது” எனக்கண்டுள்ளான்....
விழித்துக்கொண்ட அவன் உடனடியாக தனது சக நண்பர்களிடம் தான் கண்ட கனவினைக் கூறி “ தாம் திரும்பி ரியாத்திற்குச் சென்று விடுவோம்”என நச்சரித்துள்ளான்....
எனினும் அவனது சக நண்பர்கள் இவனது கோரிக்கையை செவி மடுக்காது கிண்டல் செய்ததுடன் ஏளனமும் படுத்தினர். இதனால் அவன் “ தன்னை இவ்விடத்திலேயே இறக்கி விட்டுப் போகுமாறு கூறி நடு வீதியில் இறங்கிக் கொண்டான்....
மீண்டும் ரியாத் நகரம் வருவதற்கு வேண்டி அவ்வழியாகச் சென்ற வாகனங்களுக்கு கை அசைவு மூலமாக சமிக்ஞை செய்தும் சுமார் ஓரு மணி நேரத்திற்கும் மேலாக யாரும் முன்வரவில்லை ..
அதன் பின்னரேயே ஒரு மனிதர் அவ்வழியால் தனியாக வாகனமோட்டி வருகையில் இவனது கையசைவிற்கு உடன்பட்டு அழைத்துக்கொண்டு பிரயாணிக்கையில்,
அவர்களது சம்பாஷணைகளுக்கூடாக .......“ உனக்கு என்ன ஆயிற்று.... ஜன நடமாற்றம் அற்ற இப்பகுதியில் ஏன் தனிமையில் நின்றாய்..... உனது வாகனம் எங்கே !? என அவ்வழிப்போக்கர் வினாவுகையில் .....
இவனும் தனது செய்திகளைப் பரிமாறியுள்ளான்......
உடனே அவ்வழிப்போக்கரான அப்பெரிய மனிதர் ....
அல்லாஹ்வைப் புகழ்ந்து அழுதவராக வாகனத்தை நிறுத்தி அழுதவாறு கூறியதாவது :......
தான் வருகையில் நீ குறிப்பிட்ட அந்த 70 கிலோ மீட்டர் தூரத்தில்...... ஓரு வாகனம் தீப்பிடித்து எறிந்த கொண்டு இருக்க............தீ அணைப்பு படைகளும் போக்குவரத்து போளிசாரும் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர போராடிக் கொண்டிருப்பதினையும் மூன்று சடலங்கள் தீயில் கருகிய நிலையில் பாதையோரமாக கிடக்கப்பெற்று இருப்பதினையும் கண்ணுற்றவாரே வந்து கொண்டிருக்கின்றேன் எனக் கூறி இவ்வாலிபனை அணைத்துக் கொண்டு அழுது அல்லாஹ்வின் பேரன்பை காட்சியப்படுத்தி அவனது வீடுவரை அழைத்துச்சென்று இறக்கி விட்டுள்ளார்......
அதன் பின்னர் இவ்விளைஞன்,தனது பிரதேச பள்ளிவாயல் இமாம் அவர்களிடம் சென்று தனக்கு சம்பவித்த அணைத்து விடயங்களையும் விலாவாறியாக கூறி தான் எவ்வாறு இறைவனது திருப்பதியைப் பெற்றுக் கொள்வது எனக் கேட்டுள்ளான்.......
இமாம் அவர்களும் துனுக்குற்றவர்களாக ......
“உன்னைப் படைத்த ஏக வல்லமைமிக்க அல்லாஹ் த ஆலாவை நீ துதி செய்து தொளபாச் செய்து பாவமண்ணிப்பைப் பெற பிராயச்சித்தம் செய்து கொள்” எனக் கூறியுள்ளார்.....
.........மறுநாள் வெள்ளிக்கிழமை இவனது அனுமதியைப் பெற்று தனது குத்பா பிரசங்கத்தில் அவ்விளைஞனைக் காட்சியப்படுத்தி பாவங்களுக்கான ஏக நாயன் அல்லாஹ்வின் நிகழ்கால தன்டனையையும் அப்பாவங்களிலிலுருந்து விடுபட எவ்வாறான சமிக்ஞைகளை தமக்கு தரவிறக்கம் செய்து தருவான் என்பதையும் சுற்றிக் காண்பித்தார்.......
சுபுஹானல்லாஹ்....
அல்லாஹ், மிகவும் இரக்கமுடையவன் என்பதையும்...... தண்டிப்பதில் மிகவும் கடினமானவன் என்பதையும் .....நான் இந்நிகழ்வினூடாக கண்டு கொண்டேன்..
இதை வாசித்த நீங்களும் கண்டு கொண்டிருப்பீர்கள் என நம்புகின்றேன்...
அல்ஹம்து லில்லாஹ்....
நாம் அணைவரும் அவனுக்கு பிடித்தமான செயல்களுக்கு ஏற்ப நமது வாழ்வை மாற்றி அமைத்து கொடூரமான முறையில் நமது மரணம் சம்பவிக்காது ஜஹன்னத்தில் இருந்து தூரமாக்கப்பட்டு ஜன்னதுல் பிர்தொளஸ் எனும் மனித கண்களால் கண்டிடாத சுவர்க்கத்தை ரப்பு தந்தருள் புரிந்து விடுவானாக...ஆமீன்..
(இச்சம்பவத்தை மற்றையவர்களுக்கும் செயார் செய்வதனூடாக படிப்பினைகளைப் பெற உதவிடுங்கள்)
- Nawas Dawood-
Post a Comment