Header Ads



9 வயது சிறுவனின் சடலம், காட்டிலிருந்து மீட்பு - கொலை செய்யமுன் துஷ்பிரயோகம்

9 வயதான சிறுவன் ஒருவனை கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

சிலாபம் - இரணவில, சமிதுகமயை சேர்ந்த ஜுவான் ஜேடிகே சுதீர நிர்மல் என்ற 9 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். 

கடந்த 25 ஆம் திகதி இந்த சிறுவன் காணமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இனந்தெரியாத ஒருவர் குறித்த சிறுவனை அழைத்து சென்ற காணொளி அப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றின் பாதுகாப்பு கெமராவில் பதிவாகி இருந்தது. 

ஊர் மக்கள் நடத்திய சோதனையின் போது குறித்த சிறுவனின் சடலம் நிர்வாணமாக இரணவில காட்டுப் பகுதியில் இன்று (27) காலை மீட்கப்பட்டுள்ளது 

சிறுவனை கொலை செய்ய முன்பு துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.