6 ஆம் திகதி பாராளுமன்றம் கூடுகிறது, ஆசனங்களில் மாற்றிமல்லை
அமைச்சரவை மாற்றத்தின் போது அமைச்சர்களாக நியமிக்கப்பட்டோருக்கு அவர்களின் நாடாளுமன்றக் கதிரைகளில் மாற்றம் செய்யமுடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் கூடுதல் காலம் பதவி உறுப்பினர்களாக இருந்தவர்கள் என்ற மூப்பின் அடிப்படையிலேயே உறுப்பினர்களுக்கான ஆசனங்கள் ஒதுக்கப்படும்.
இந்நிலையில் அமைச்சுப் பதவிகளில் நியமிக்கப்படுகின்றவர்களுக்கும் அவர்களின் மூப்பின் அடிப்படையிலேயே நாடாளுமன்றக் கதிரைகள் ஒதுக்கப்படுமே தவிர அமைச்சுப் பதவி அதில் பொருட்படுத்தப்பட மாட்டாது என்று நாடாளுமன்ற செயலாளர் தெரிவித்துள்ளார்.
பொதுவாக நாடாளுமன்றத்தின் படைக்கல சேவிதரே ஆசனங்களை ஒதுக்குவது வழக்கம்.
அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் மார்ச் -06ம் திகதி நாடாளுமன்றம் கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment