69 வயதில் இளைஞர், அமைச்சரான பியசேன
நேற்றைய அமைச்சரவை மாற்றத்தின் போது, 69 வயது 45 நாட்களுமேயான சிரேஷ்ட அரசியல்வாதி பியசேன கமகே, இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். இதைச் சமூக ஊடகங்கள் வெகுவாக விமர்சித்திருந்தன. அதற்குப் பதிலளிக்கும் வகையில் கருத்து பரிமாற்றியுள்ளவர்கள், 2010 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலும் திஸ்ஸ கரலியத்த, பெண்கள் விவகார அமைச்சராகப் பணியாற்றியிருந்தார்.
ஆண் அமைச்சரொருவர், பெண்கள் விவகார அமைச்சராகப் பதவிவகிக்க முடியுமாயின், ஆண் அமைச்சரொருவர், இளைஞர் விவகார அமைச்சராக ஏன் பதவிவகிக்க முடியாதென, பதிலளித்து கேள்வியெழுப்பியிருந்தனர்.
Post a Comment