வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம், 65 - 80 வாக்குகள் பதிவு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 65 - 80 வீத வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
வாக்குகளை எண்ணும் பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வாக்குப்பதிவு இடம்பெற்ற மத்திய நிலையங்களிலேயே வாக்குகள் எண்ணும் பணிகளும் இடம்பெறுகின்றன.
யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று பிற்பகல் 3 மணி வரை 47 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
மன்னார் மாவட்டத்தில் மதியம்வரை 70 சதவீத வாக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன், கிளிநொச்சியில் 69 சதவீத வாக்குகளும், வவுனியா மாவட்டத்தில் 60 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் 70 சதவீத வாக்குகளும் பதுளை மாவட்டத்தில் 60 சதவீத வாக்குகளும் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் 75 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தவிர கண்டி மாவட்டத்தில் 65-70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் , கம்பஹா மாவட்டத்தில் 73 சத வீத வாக்குகளும் , களுத்துறை மாவட்டத்தில் 70 சத வீத வாக்குகளும், மாத்தறை மாவட்டத்தில் 64 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ள நிலையில், ஹம்பாந்தோட்டையில் 65 சத வீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தில் 75-80 வீத வாக்குகள் பதிவாகியுள்ளதுடன், மொனராகலை மாவட்டத்தில் 75 வீத வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலன்னறுவை மாவட்டத்தில் 68 வீத வாக்குகளும், புத்தளம் மாவட்டத்தில் 70 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment