அன்றைய உதுமான் ரழியின், இன்றைய 5 ஸ்டார் ஹோட்டல்
-இலியாஸ்தீன் கீரனூரி-
முஹாஜிர்கள் (மக்காவிலிருந்து புலம்பெயர்ந்த முதல் !!முஸ்லிம் சமூகம்) மதீனாவிற்கு குடிபெயர்ந்தவுடன் அவர்கள் மதீனா நகரின் குடிநீரின் சுவையில் வித்தியாசத்தை கண்டனர்.
மக்காவின் ஜம்ஜம் நீர் போன்று மதீனாவின் குடிநீர் இனிய சுவையுடன் இல்லையே என அவர்களுக்கு ஒரு சிறிய வருத்தம். ஆனால் மதீனா நகரில் ருமா என்ற பெயருடைய ஒரு கிணற்றின் நீர் மட்டும் ஜம்ஜம் குடிநீரின் சுவையில் ஓரளவு ஒத்திருந்தது.
உடனே முஹாஜிர்கள் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் சென்று தங்களது சங்கடத்தையும், ருமா கிணறை குறித்த செய்தியையும் தெரிவித்தார்கள்.
ஆனால் அந்த கிணற்றின் உரிமையாளரோ ஒரு யூத மதத்தை சேர்ந்தவர். ஒரு கவளம் நீருக்குக்கூட தான் பணம் வசூலிப்பேன் என்பதில் அந்த யூதர் உறுதியாக இருந்தார். ரசூலுல்லாஹ் உடனே ஆள் அனுப்புகிறார். முஸ்லிம்களின் தாகத்தை போக்கும் இந்த கிணறுக்கு பகரமாக சுவனத்தில் ஒரு பூங்காவை உனக்கு நான் வாக்களிக்கிறேன் என்று அந்த யூதருக்கு செய்தி அனுப்புகிறார். எனினும் ரசூலுல்லாஹ்வின் அழகிய வியாபாரத்தை அந்த யூதர் நிராகரித்தார். பணம் மட்டுமே தான் வாங்குவேன் என்றும் பதில் கூறியுள்ளார்.
இந்த செய்தி அப்போதைய நபித்தோழரும், அமீருல் முஃமினீன், மூன்றாவது கலீஃபா உதுமான் இப்னு அஃப்பான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் காதுக்கு வருகிறது. இந்த கிணறை எப்படியாவது வாங்கி சொர்க்கத்தில் வாக்களிக்கப்பட்ட அந்த பூங்காவை தான் அடைய வேண்டும் என உதுமான் அவர்களுக்கு ஒரு ஆவல்..
வியாபார பேச்சுவார்த்தைக்கு பின்னர் அன்றைய மதிப்பில் சுமார் 20,000 திர்ஹாம் காசுகளுக்கு யூதரிடமிருந்து அந்த கிணற்றை உதுமான் அவர்கள் விலைக்கு வாங்குகிறார்கள். வாங்கியதோடு மட்டுமல்லாமல், அந்த கிணற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யும் நோக்கில் முஸ்லிம்களுக்கு நீர் புகட்டும் வக்ஃபு சொத்தாக அறிவிக்கிறார்கள்.
பிற்காலத்தில் மற்றுமொரு நபித்தோழருக்கும் (பெயர் அறிய இயலவில்லை) சுவனத்தின் மீது அளவுகடந்து ஆசை வந்தது போலிருக்கின்றது. அந்த நபித்தோழர், வக்ஃபு கிணற்றை அதன் மதிப்பைவிட சுமார் ஒன்பது மடங்கு அதிகம் விலைக்கு உதுமான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வியாபாரம் பேசுகிறார்.
ஆனால் கடைசிவரை உதுமான் அவர்கள் அதனை யாருக்கும் விற்கவேயில்லை. (பாருங்கள் சகோதர, சகோதரிகளே. அன்றை சஹாபிகள் எந்த அளவிற்கு அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யவும், சுவனத்தின் மீது வெறிபிடித்தவர்களாகவும் இருந்துள்ளனர்) சுப்ஹானல்லாஹ்!!!
வக்ஃபு சொத்தாகவே இன்றும் அந்த கிணறு நீடிக்கின்றது. பல்வேறு ஆளுநர்களின் மேற்பார்வையில் இருந்த அந்த கிணறு ஒட்டமான் பேரரசின் கைகளுக்கும், இறுதியில் தற்போது சவுதி அரேபிய அரசின் நிர்வாகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. அந்த கிணறை சுற்றியுள்ள பகுதிகளின் இன்று சுமார் 1500 பேரீத்த மரங்கள் கொண்ட ஒரு தோட்டம் பராமரிக்கப்பட்டு வருகிறது.
சவுதி அரேபியாவின் வேளாண்துறை அமைச்சகம் அந்த தோட்டத்தில் விளையும் பேரீத்தம் பழங்களின் வருவாயை இரண்டாக பிரித்து, ஒரு பாதியை ஏழைகள் மற்றும் அநாதைகளுக்கும் மற்றொரு பாதியை உதுமான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் பெயரில் துவங்கப்பட பிரத்யேக வங்கிக்கணக்கிலும் செலுத்தி வருகிறார்கள்.
வங்கிக்கணக்கில் பணம் எவ்வளவு சேர்ந்ததுள்ளது ஏன்றால் ஆச்சரியப்படுவோம். அதில் சேர்ந்த பணத்தின் மூலம் இன்றைய தினம் மஸ்ஜிதுன் நபவிக்கு அருகேயுள்ள உதுமான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் பெயராலேயே ஒரு நிலம் வாங்கப்பட்டு, அங்கே நட்சத்திர ஹோட்டலும் கட்டப்பட்டு வருகிறது.
கட்டுமானப்பணிகள் இறுதி கட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. பணிகள் நிறைவடைந்ததும், அந்த கட்டிடத்தை 5 ஸ்டார் ஹோட்டல்களை பராமரிக்கும் ஒரு நிறுவனத்திற்கு குத்தகைக்குவிட சவுதி அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இந்த ஹோட்டல் செயல்பாட்டிற்கு வந்தவுடன் வருடத்திற்கு இந்திய மதிப்பில் சுமார் 85 கோடி ரூபாய் (50 மில்லியன் சவுதி ரியால்கள்) வருவாய் ஈட்டும் என கணக்கிட்டுள்ளார்கள்.
வழக்கம்போல் வருமானத்தில் ஒரு பாதியை அநாதைகள் மற்றும் ஏழைகளுக்கும், இன்னொரு பாதி மீண்டும் உதுமான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் வங்கி கணக்கிலேயே செலுத்தி வருவார்கள்.
மொத்த வரலாற்றை படிக்கும் போது, ஆரம்பத்தில் சாதாரண ஒரு கிணறு தானே என உதுமான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நினைத்துவிட்டு போயிருக்கலாம். உதுமான் கனவிலும் நினைத்திருப்பாரா, பிற்காலத்தில் அந்த கிணறை சுற்றி 1500 பேரீத்தம் மரங்களுடைய தோட்டம் வளரும் என்று?
தன்னுடைய மறுமை வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் என்ற தனது ஒற்றை வெறியின் பயனை, அல்லாஹூ தஆலா அவர் மரணித்த பிறகும் அவரை நிரந்தர செல்வந்தராகவே ஆக்கியுள்ளான். அல்லாஹூ அக்பர்.
Do not judge the peoples based on your mind of view. You do not know about Usmaan (Alihisslaam). Even you colud not see his face also. Then how you can say like this, “ Usmaan (Alihisslaam) was not think in his dream about this current situation.
ReplyDeletekindly requesting you to change the words in this article
ReplyDeleteMr zakee which words must be changed how it should be changed. please try to make your idea clear.We don't see any thing that warrant a change.
ReplyDeleteYa Allah antha UMAR RALIYALLAHU ANHU avarkalukku kidakkum kooliyai pala trillion kalaha akkuvayaha. Enakkum avvarana nanmaihalai seivatharku santharpathai thanthuviduvayaha
ReplyDeleteUsman ( Ra) வக்பு செய்த சொத்தை எப்படி அவர் மீண்டும விற்க முடியும் அவரிடம் பேர்ம் பேசிய சஹாபிக்கு மூலை இல்லயா அல்லது இந்த கதையின் இறுதிப்பாகத்தை நம்பதான் முடியுமா?
ReplyDelete