கல்முனையில் 550 குடும்பங்களுக்கு ஆபத்து (படங்கள்)
(எஸ் .எல். அப்துல் அஸீஸ்)
கல்முனை பிரதேசத்திலுள்ள ‘கிரீன் பீல்ட்’ சுனாமி வீட்டுத்திட்டத்தையும், பிரதான வீதியையும் இணைக்கும் பாலம் சேதமடைந்து வருவதனால் அங்கு வாழும் சுமார் 550 குடும்பங்களின் போக்குவரத்துக்கு பாதுகாப்பற்ற நிலை தோன்றியுள்ளது.
கல்முனை முஹையதீன் பெரிய ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு முன்பாக செல்லும் வீதியையும், ‘கிரீன் பீல்ட்’ சுனாமி வீட்டுத்திட்டத்தையும், இணைக்கும் பாலமானது தற்போது சேதமடைந்து வருகின்றது.
இதனால் ‘கிரீன் பீல்ட்’ சுனாமி வீட்டுத்திட்டத்தில் வாழும் மக்களும், அப் பிரதேசத்தில் விவசாய நடவடிக்கைக்காக பயணத்தில் ஈடுபடும் விவாசயிகளும், பல சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும், தங்களது போக்குவரத்தில் பாதுகாப்பற்ற நிலை தோன்றியுள்ளதுடன், இப் பாலத்தினால் விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட பிரதம பொறியியலாளர் எம்.பி. அலியாரிடம் இன்று கேட்டபோது,
'தங்களால் அமைக்கப்பட்ட குறிப்பிட்ட பாலத்தின் பொறுப்பதிகாரம் கல்முனை மாநகர சபைக்கே உரித்தானதாகும் இருப்பினும் இப் பாலத்தினை திருத்தம் செய்வது தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாண பிரதம பொறியியலாளருக்கு வேண்டுகோள் அறிக்கை அனுப்பியுள்ளோம் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்தும் இவ்விடயம் சம்பந்தமாக கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாக்கத்தலியிடம் இன்று கேட்டபோது,
குறிப்பிட்ட பாலத்தினை திருத்தவேண்டிய அவசியம் பற்றி வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாண பிரதம பொறியியலாளருக்கு வேண்டுகோள் விடுக்கவுள்ளோம் எனக் குறிப்பிட்டார்.
பல மாதம்களாக காணப்படும் இந்த பாலம் தொடர்பான திருத்ததேவையினை, பொறுப்புவாய்ந் த அதிகாரிகளும், இப் பிரதேச அரசியல் பிரமுகர்களும் சீர் செய்ய உடனடியாக முன்வர வேண்டும் என்பதே இம் மக்களினதும்,‘கிரீன் பீல்ட்’ சுனாமி வீட்டுத்திட்ட முகாமைத்துவ சபை நிர்வாகிகளினதும் ஆதங்கமாகவுள் ளது.
Post a Comment