54 வயது இலங்கை, பெண் கொலை - எகிப்தியர் கைது
எகிப்தில் பணிபுரிந்த 54 வயதான இலங்கைப் பணிப் பெண் ஒருவரை கொலை செய்த குற்றத்துக்காக, அந்த நாட்டின் 22 வயதான வாகன சாரதி ஒருவர் கைதாகியுள்ளார்.
ஈஜிப் இண்டிபெண்டன்ட் என்ற பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
குறித்தப் பெண்ணும், சந்தேகநபரும் ஒரே இல்லத்தில் பணியாற்றிவந்த நிலையில், அவர்களுக்கு இடையில் காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இருவரும் இலங்கை வந்து திருமண பந்தத்தில் இணைந்துக் கொள்ள இலங்கைப் பெண்ணின் வீட்டாரிடம் சம்மதம் கேட்ட போதும், அதற்கு வீட்டார் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து குறித்தப் பெண்ணை சந்தேகநபர் நிராகரிக்க ஆரம்பித்ததுடன், வேறொரு பெண்ணை திருமணம் செய்துக் கொள்ளவும் முயற்சித்துள்ளார்.
எனினும் குறித்த இலங்கைப் பெண் அவரை தொடர்ந்து அச்சுறுத்தி வந்ததாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், அவரை தாம் கொலை செய்ததாக சந்தேகநபர் விசாரணையாளரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
சந்தேகநபர் நான்கு நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக எகிப்தின் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Post a Comment