4 மணி நேரத்தில் 2,564 பேர் கைது - 4,735 வழக்குகள் தாக்கல்
இன்று -24- அதிகாலை 2 மணிமுதல் காலை 6 மணிவரையில், நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு தேடுதலின் போது, 2,564 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்தச் சுற்றிவளைப்பு தேடுதலுக்காக, 16 ஆயிரத்து 256 பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டனர் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்டவர்களில், மதுபோதையில் வாகனங்களை செலுத்தியவர்கள் 504 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தவர்களில் 720 பேரும், பல்வேறான குற்றச்சாட்டுகள் தொடர்பில் 741 பேரும், ஹெரோய்ன் ஏனைய போதைப்பொருட்கள் மற்றும் சட்டவிரோதமான மதுபானம் தொடர்பில் 524 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி, அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச்சென்ற குற்றச்சாட்டில் 71 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன், அனுமதிப்பத்திரமின்றி துப்பாக்கிகளை வைத்திருந்தனர் என்றக் குற்றச்சாட்டில் 04 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றுக்கு மேல், போக்குவரத்து தொடர்பில் 4,735 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What matters is successful conviction, which is very low.
ReplyDelete