முஸ்லிம் பகுதியில், மஹிந்த ஆதரவு 3 பெண்கள் மீது தாக்குதல்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஏறாவூர் நகர சபைக்காக போட்டியிடும் மஹிந்த ராஜபக்ஷ அணியின் தாமரை மொட்டு பொதுப் பட்டியல் வேட்பாளரான யுவதி மற்றும் அதன் பிரசார ஆதரவாளர்களான இருவர் உட்பட மொத்தம் 3 பெண்கள் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று மாலை -06- இடம்பெற்றுள்ள இச்சம்பவம் பற்றி ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் தேர்தல் வன்முறையாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏறாவூர் ஜூப்ரியா வட்டாரத்தில் போட்டியிடும் தாமரை மொட்டு அணியின் பெண் வேட்பாளருக்கு ஆதரவாக அவரது குழுவினர் வீடு வீடாகச் சென்று கொண்டிருந்தபோது மாற்று அணியைச் சேர்ந்த ஆண் ஒருவர் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டு இந்தப் பெண்களைத் தாக்கத் துவங்கியதாகவும் அதில் காயமடைந்த பெண்கள் மூவரும் உடனடியாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தாக்குதலுக்குள்ளான கர்ப்பிணியான பெண்ணொருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பொதுப்பட்டியல் வேட்பாளரான யுவதியும் பிரசார ஆதரவாளரும் தொடர்ந்து ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
cancel voting in that polling station
ReplyDelete