Header Ads



ஊடக அமைச்சை, ஏற்கமறுத்த 2 பேர்

ஊடக அமைச்சை ஏற்றுக்கொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பினை அமைச்சர்களான ருவான் விஜேவர்தன மற்றும் ஹரீன் பெர்னாண்டோ ஆகிய இருவருமே நிராகரித்துள்ளனர்.

தற்போது நிதி மற்றும் ஊடக அமைச்சராக மங்கள சமரவீர கடமையாற்றி வருகின்றார். மங்களவிடமிருந்து ஊடக அமைச்சினை பிரித்தெடுத்து, அதனை இளைய ஐ.தே.க உறுப்பினர் ஒருவரிடம் ஒப்படைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும், இந்த திட்டத்திற்கு இளைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. ஊடக அமைச்சினை ஏற்றுக்கொள்ளுமாறு ஹரீன் பெர்னாண்டோவிடம் கோரப்பட்ட போது அதனை அவர் நிராகரித்துள்ளார். அத்துடன் ருவான் விஜயவர்தனவிடமும் இதே கோரிக்கை முன்வைக்கப்பட்டதாகவும் அவரது குடும்பத்தினர் பத்திரிகை நிறுவனமொன்றை நடத்தி வருவதனால் அவரும் பொறுப்பினை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை எனவும் ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மைய அமைச்சு மாற்றமானது இன்னும் பல்வேறு சிக்கல்களை உருவாக்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

No comments

Powered by Blogger.