ஒரு பாங்கு சொல்லி முடிக்க, 22 பேர் உயிர்தியாகம் செய்த வரலாறு..!
காஷ்மீர் செண்ட்ரல் ஜெயிலுக்கு எதிரில் கூடி ஆர்ப்பாட்டம் நடத்திய முஸ்லிம்களை 'டோக்ரா' மன்னர் படை சிதறடித்துக் கொண்டிருந்தது.
அப்போது தொழுகை நேரம் வந்தவுடன் ஒரு காஷ்மீரி எழுந்து, பாங்கு சொல்ல ஆரம்பித்தார், டோக்ரா படை அவரை சுட்டு வீழ்த்திவிட்டது.
இதைக்கண்ட மற்றொரு காஷ்மீரி, குண்டடி பட்டவர் விட்ட இடத்திலிருந்து மீண்டும் பாங்கு சொல்ல தொடங்கினார்.
ஈவு, இறக்கமற்ற அந்த அரச பயங்கரவாத படை, பாங்கு சொல்ல தொடங்கிய இரண்டாமவரையும் சுட்டு வீழ்த்தியது.
ஆனாலும், தொடங்கப்பட்ட அந்த பாங்கை தொடர்ந்து சொல்லி முடிப்பதில் உறுதியாக இருந்தனர், முஸ்லிம்கள்.
இப்படியாக, ஒருவர் பின் ஒருவராக 22 பேர் (ஷஹீதாகி) உயிர் தியாகம் செய்து அந்த பாங்கை முழுமைப் படுத்தினர்.
ஒரு பாங்கை சொல்லி முடிக்க 22 பேர் ஷஹீதானது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்வவமாகும்.
இடம் : காஷ்மீர்
நாள் : 13-07-1931
நாள் : 13-07-1931
Post a Comment