Header Ads



டொக்டர் அமானுல்லாஹ்வுக்கு, கத்தாரில் 'சிறந்த சேவைக்கான விருது 2018'

இலங்கையின் 70 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கத்தார் நாட்டின் இலங்கை தூதரகம், மற்றும் slcc இணைந்து கத்தாரில் பணிபுரியும் இலங்கையருள், கத்தார் வாழ் இலங்கைச் சமூகத்துக்குசிறந்த முறையில் சேவை செய்யும் சிலரைத் தேர்வு செய்து, அவர்களுக்கு விருதுகளை வழங்கிய நிகழ்வொன்றுகடந்த கத்தாரில்  இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இலங்கையின் கண்டி மாநகரை ஒட்டிய கல்ஹின்ன எனும் ஊரைப் பிறப்பிடமாகக் கொண்ட, கத்தார் ஹமத் வைத்தியசாலையில் பணிபுரியும் கத்தார் சிப்பிக்குள் ஒரு முது;து என வரணிக்கப்படும் வைத்தியர் அமானுல்லாஹ் இஸ்மாயில் அவர்களுக்கு, அவரது ஐந்து வருட சேவையை பாராட்டி, கௌரவிக்கும் முகமாக மாண்புமிகு இலங்கைத் தூதுவர் ஏ.எஸ்.பி. லியனகே அவர்களால் சிறந்த சேவைக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

டொக்டர் அமானுல்லாஹ் அவர்கள் Sri lanka Community Welfare Federation Qatar அமைப்பின் நிர்வாகக் குழுவின் உபதலைவராகச் செயற்படும் அதே வேளை, சமூக சேவையிலும் தஃவாப் பணிகளிலும் மிகவும் ஈடுபாடு கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்க ஓர் அம்சமாகும்.

அன்னாரது சமூக மற்றும் சன்மார்க்கப்பணிகளை அல்லாஹ் ஏற்றுக் கொள்வதுடன், மென்மேலும் அவரது பணிகள் தொடர திடகாத்திரத்தையும் மனோ வலிமையையும் அருளி, நீண்ட ஆயுளையும் கொடுப்பானாக என பிரார்த்திக்கின்றோம்.

தகவல் : கத்தாரிலிருந்து நாகூர் ழரீஃப்





No comments

Powered by Blogger.