வெற்றியீட்டினார் நிலாம் - யாழ்ப்பாணத்தில் 13 ஆம் வட்டாரத்தை கைப்பற்றிய யானை
-பாறுக் ஷிஹான்-
உள்ளுராட்சி சபை தேர்தலில் யாழ் மாநகர சபை வட்டாரம் 13 ற்காக போட்டியிட்ட சமூக சேவகர் கே.எம் நிலாம் வெற்றி பெற்றுள்ளார்.
யாழ் மாநகரசபை தேர்தலில் 13 ஆம் வட்டாரத்தில் இவர் போட்டியிட்ட ஐக்கிய தேசிய கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கூட்டணி மக்களின் அமோக வாக்குகளை பெற்றுள்ளது.
இம்முறை நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி தேர்தலில் யாழ் மாநகர சபைக்காக பல கட்சிகள் போட்டியிட்டிருந்த நிலையில் இவ்வட்டாரத்திற்காக ஐக்கிய தேசிய கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கூட்டணி தமிழ் தேசிய கூட்டமைப்பு ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டிருந்திருந்தன.
இந்நிலையில் சுமார் 30 வருடங்களுக்கு பின்னர் ஐ.தே.க மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கூட்டணி தற்போதைய தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டணில் வேட்பாளராக இருந்த கே.எம் நிலாமை அவர் பெரிதும் நேசித்து வந்த தமிழ் முஸ்லீம் மக்கள் மாநகர சபை உறுப்பினராக்கி உள்ளார்கள்.
யாழ்ப்பாணத்தின் சனத்தொகையில் மிகச் சிறு தொகையினரான முஸ்லிம்களின் பிரதிநிதியாகத் தெரிவாகியுள்ள நிலாம், தனக்கு ஆதரவு தெரிவித்த ஜப்னா முஸ்லீம் இணையத்திற்கு கண்ணீருடன் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
அத்துடன் தனக்கு ஆதரவளித்த மக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ள அவர் 4 வருட காலத்தில் மக்களின் சேவையில் அக்கறையுடன் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தார்.
கட்சிகள் பெற்ற வாக்குகள்-
ஐக்கிய தேசிய கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கூட்டணி-596
தமிழ் தேசிய கூட்டமைப்பு- 566
ஈழமக்கள் ஜனநாயக கட்சி-325

Post a Comment