ஒரே ஒரு இடத்தில் மாத்திரமே (X) புள்ளடியிட வேண்டும், இல்லையேல் வாக்குசீட்டு நிராகரிப்பு
உள்ளூராட்சித் தேர்தலில் வாக்காளர்கள் வாக்குச்சீட்டில் ஒரே ஒரு இடத்தில் மாத்திரமே புள்ளடியிட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் பணியகத்தில் நடந்த கூட்டத்தில் கருத்து வெளியிட்ட அவர், ”வாக்குச்சீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட புள்ளடிகள் இடப்பட்டிருந்தால், அந்த வாக்குச்சீட்டு நிராகரிக்கப்படும்.
வாக்குச்சீட்டில் விருப்பு வாக்குகளை அளிப்பதற்கான கட்டங்களோ இடைவெளிகளோ இடம்பெற்றிருக்காது.
வாக்காளர்கள் அரசியல் கட்சி அல்லது சுயேட்சைக் குழுவுக்கு எதிரே தான் புள்ளடியிட வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment