Header Ads



மைத்திரியை விமர்சிக்க வேண்டாம், பிரதமர் உத்தரவு - UNP விசேட கூட்டத்தில் கடும் வாக்குவாதம்


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை விமர்சிப்பதனை தவிர்த்துக்கொள்ளுமாறு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பணித்துள்ளதோடு கடுமையான வாதபிரதிவாதத்திலும் ஈடுபட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் விசேட குழு கூட்டம் இன்றைய தினம் -17- அக்கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில் இடம்பெற்றது.

இதன்போது உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை விமர்சிப்பதனை தவிர்த்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

பினைமுறி விவகாரம் தொடர்பில் விசாரணைளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு செயற்பாடுகளை அடிப்படையாக கொண்டு ஜனாதிபதியை விமர்சித்தமையினால் நேற்றைய தினம் அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதி வெளிநடப்பு செய்திருந்தார்.

இந்நிலையிலேயே இன்றைய தினம் விசேட குழு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன்போது ஜனாதிபதியை விமர்சிப்பதனை தவிர்த்துக்கொள்ளுமாறு பிரதமர் விடுத்த கோரிக்கைக்கு பலர் தங்களுக்கு கருத்துக்களை முன்வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் நடவடிக்கைகள் திட்டமிடல்கள் எவ்வாறு இடம்பெற்று வருகின்றன என்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அமைச்சர் நவின் திசாநாயக்க தெரிவித்தார்.

1 comment:

  1. You show always you are gentleman... But be aware the My3 is not like you....
    Take care

    ReplyDelete

Powered by Blogger.