Header Ads



குற்றவாளிகளை பாதுகாத்தால், UNP யில் அங்கம்வகிப்பதில் பயனில்லை - ஹர்ஷ சில்வா

முறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாவிட்டால் தாம் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து விலகுவதாக பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

கோட்டை பிரதேசத்தில் இன்று -13- இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் யாரேனும் குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்டால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அவ்வாறில்லாமல் யாரேனும் பாதுகாக்கப்படுவார்களேயானால் ஐக்கிய தேசிய கட்சியில் அங்கம் வகிப்பதில் பயன் இல்லை.

ஐக்கிய தேசிய கட்சி திருடர்களை பாதுகாக்கும் கட்சியாக செயற்படும் கட்சியல்லவென ஹர்ஷ டி சில்வா இதன்போது குறிப்பிட்டார். 

1 comment:

Powered by Blogger.