நாமல் பேபி தலைவராக, வரும்வரை unp அரசு இருக்க வேண்டுமென்பதே மகிந்தவின் திட்டம்
பொதுஜன முன்னணியின் முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஏன் உரையாற்றினார் என்பதை அமைச்சர் சம்பிக்க ரணவக்க நேற்று தெளிவுப்படுத்தியுள்ளார்.
பொரலஸ்கமுவ பிரதேச சபைக்கு ஐக்கிய தேசியக்கட்சியின் பட்டியலில் போட்டியிடும் பந்துல சந்திரசேகரவை ஆதரித்து ரத்னப்பிட்டியவில் நடைபெற்ற கூட்டத்தில் உயைராற்றும் போதே அவர் இதனை தெளிவுப்படுத்தியுள்ளார்.
“தாமரை மொட்டு சின்னத்தின் ஆரம்ப தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மகிந்த ராஜபக்ச சிரித்துக்கொண்டிருந்தார்.
பொதுஜன முன்னணியின் தலைவராகும் எண்ணத்தில் இருந்தவர்களை பார்த்தே அவர் சிரித்தார். எவருக்கும் பொதுஜன முன்னணியின் தலைவராக வாய்ப்பு கிடைக்காது என்பதை மகிந்த நன்றாக அறிவார்.
நாமல் பேபி பொதுஜன முன்னணியின் தலைவராக வரும் வரை ஐக்கிய தேசியக்கட்சியின் அரசாங்கத்தை வைத்திருக்க வேண்டும் என்பது மகிந்தவின் திட்டம்.
நாமல் பேபியின் அரசியல் எதிர்காலத்தை தவிர மகிந்த ராஜபக்ச வேறு எதனையும் நினைக்க மாட்டார்.
இதனால், பொதுஜன முன்னணியின் தலைவராகும் கனவில் இருக்கும் எனது பழைய நண்பர்களை தொடர்ந்தும் ஏமாற வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
குடும்ப அரசியலை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டின் எதிர்காலத்தை நிர்மாணிக்கும் அரசியல் நீரோட்டத்தில் இளைஞர்களை கொண்டு வரும் பயணத்தில் எங்களுடன் இணையுங்கள்.
ஒரு குடும்பத்தை கட்டியெழுப்ப கடைக்கு போனது போதும். நாமல் பேபியை தவிர பொதுஜன முன்னணியின் தலைவராக எண்ணும் எவருக்கும் அரசியல் எதிர்காலம் இல்லை.
பொதுஜன முன்னணியின் தலைவர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் பசிலுக்கு மாத்திரமல்ல, குறைந்தது கோத்தபாயவுக்கு கூட தலைவராக மகிந்த இடமளிக்க மாட்டார் என சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment