பாராளுமன்றில் மயங்கி விழுந்த ஐ.தே.க Mp
-ஆர்.மகேஸ்வரி-
பிணைமுறி விவகார விசாரணை அறிக்கை தொடர்பில்நாடாளுமன்றில் இன்று -10- இடம்பெற்று வரும் விசேட அமர்வின் போது, சபையில் மயக்கமடைந்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற அம்பியுலன்ஸ் வண்டியில் ஏற்றப்பட்டு இவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபை நடுவே வந்து, எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதால், சபையில் குழப்பமான நிலை தோன்றியதுடன் , சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
Post a Comment