Header Ads



திஸ்ஸ மஹாராம போன்று, கல்முனையை மாற்றிக்காட்ட, சந்தர்ப்பத்தைத் தாருங்கள் - JVP

அப்பணங்களுக்கு கடந்த காலங்களில் பாரிய மோசடி நடந்துள்ளமையே அவர்களால் சேவை செய்ய முடியாமைக்கான காரணமாகும் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

மருதமுனையில் இடம் பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் முதலாவது பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

அங்கு பேசிய அவர், சந்தை வருமானம் - வாகனத்தரிப்பிட வருமானம் - குத்தகை வருமானம் - பொலிஸாரின் தண்டப்பணம் மூலம் கிடைக்கும் வருமானம் எனப் பல வருமான மூலங்களினூடாக அதிகமான வருமானங்களை ஈட்டும் மாநகர சபையாக கல்முனை இருக்கிறது.

எனினும், அதற்கேற்ப மக்களின் தேவைகள் நிறைவு செய்யப்படவில்லை. போடப்பட வேண்டிய வீதிகள் இன்னும் பல இருக்கின்றன. தெருவிளக்குகள் சீரில்லை. வடிகான்கள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. இவைகளைப் பற்றிச் சிந்திக்காமல் கடந்த காலங்களை ஆட்சி செய்தவர்கள் என்ன செய்தார்கள்?

கல்முனை மாநகர சபையில் ஊழல்கள் இடம் பெற்றுள்ளன. அதனால்தான் அவர்களால் சிறப்பான சேவையினைச் செய்ய முடியாமல் போயுள்ளது.

திஸ்ஸ மஹாராமவை எவ்வாறு இலங்கையின் முன்னணி உள்ளூராட்சி சபையாக மக்கள் விடுதலை முன்னணியால் மாற்ற முடிந்ததோ அவ்வாறே கல்முனையினையும் மாற்றுவோம்.

சுனாமி அனர்த்தம் ஏற்பட்டதும் மிக அதிகளவில் பாதிப்புற்று மருதமுனைக் கிராமத்திற்கு வந்து களம் இறங்கியவர்கள் நாம். எம்மிடம் சாதி - இன பேதங்கள் இருக்கவில்லை.

இப்பிரதேசத்தில் தற்காலிக வீடுகளை அமைத்து மக்களைக் குடியமர்த்துகின்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டோம். இவற்றையெல்லாம் தேர்தலுக்காக மேற்கொள்ள வில்லை. நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்பதற்காகச் செய்யவில்லை.

இம்மனிதாபிமானப் பணிகளை என்றும் செய்யக் காத்திருக்கின்றோம். இவைகளுக்காக வாக்களிக்க வேண்டும் என்பதல்ல எங்களது வேண்டுதல்.

இப்பிரதேசத்தை சுத்தமான, தூய்மையான அரசியல் கலாசாரமொன்றை நிலை நிறுத்தக் கூடிய இடமாக மாற்றுவதற்கு ஒரு சந்தர்ப்பம் தாருங்கள் என்றார்.

3 comments:

  1. It is high time for changes... without any hesitation we should give all local government power to JVP. we can see the real changes..

    ReplyDelete
  2. high time to support jvp



    ReplyDelete
  3. Yes give them a chance. Forget all the current rubbish politicians in the East.

    ReplyDelete

Powered by Blogger.