Header Ads



மானை இரையாக்க முயன்ற பாம்பு, காயத்துடன் மீட்பு - சிகிச்சையின் பின் பதவியா காட்டுக்கு சென்றது


இரையாக்கி கொண்ட மான் ஒன்றை விழுங்க முயற்சித்து படுகாயமடைந்த நிலையில் காணப்பட்ட மலைப்பாம்பு ஒன்றை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

பதவிய சீயாய பிரதேசத்தில் குறித்த மலைப்பாம்பு மான் ஒன்றை விழுங்க முயற்சிப்பதை கண்ட ஒருவர் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் வருகைதந்த போது மானை விழுங்க முயற்சித்த மலைப்பாம்பு காயமடைந்த நிலையில் இருந்துள்ளது.

பாதியாக விழுங்கியிருந்த மானை கக்கிய போது பாம்பின் வாய்ப் பகுதியில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த மலைப்பாம்பு உரிய சிகிச்சைக்கு பின்னர் பதவிய காட்டில் விடப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

3 comments:

  1. You forgot to mention ..What happened to the Deer?

    ReplyDelete
  2. That wrong take away from phyton mouth that deer because of their food.

    ReplyDelete
  3. Brother BullBuli.... I think you have read the message half, but if you read fully you will understand the story... They did not take the deer out the snake mouth to snatch its food. Rather the python fallen into trouble while eating, so they help the python from trouble... Hope deer would have died due to no oxygen,

    ReplyDelete

Powered by Blogger.