"அல்லாஹ் நிர்ணயித்தப் பிரகாரமே உலகும், உலகில் உள்ள அனைத்தும் இயங்குகிறது "
-Irfân Rizwân -
அல்லாஹ் நிர்ணயித்தப் பிரகாரமே உலகும், உலகில் உள்ள அனைத்தும் இயங்குகிறது இயங்கும்.
அவனுடைய நாட்டம் இல்லாமல் எதுவும் நடக்காது.
துருக்கியில் போயிங் விமானம் ஒன்று 168 பயணிகளுடன் அங்காராவிலிருந்து கருங்கடலில் உள்ள டிரப்சான் தீவில் தரையிறங்கியது. கடலுக்கு அருகே பள்ளத்தை ஒட்டிய பகுதியில் ரன்வே உள்ளது. ரன்வேயில் விமானம் வந்தபோது கட்டுப்பாட்டை மீறி திடீரென சறுக்கி பள்ளத்தில் சரிந்தது .
பயணிகள் பீதியடைந்து அலறினர். சடேரென விமானத்தின் மூக்குப் பகுதி பள்ளத்தில் சரிந்து புதைதந்து நின்று விட்டது. கீழே கடல், சன்னல் ஓரத்தில் கடலைக் கண்ட பயணிகள் கடுமையான அலறலுடன் சப்தத்தை எழுப்பினர்.
மீட்புப் படையினர் விரைந்து வந்து அனைவரையும் பத்திரமாக மீட்டனர். யாரும் காயம் அடையவும் இல்லை என்பது ஆச்சரியமானது.
புகை படத்தை பாருங்கள் சகோதரர்களே! இந்த விமானம் தப்புவுதற்கு எதாவது அறிகுறிகள் சிறிதளவேனும் உண்டா ? கண்டிப்பாக இல்லை !
அதில் உள்ள அனைவருக்கும் உலகில் வாழ்வாதாரம் இறைவனால் எழுதப்பட்டது மீதம் உள்ளது அதை அவர்கள் அடையும் வரை அவர்களை மரணம் தீண்டாது.
இது தான் இந்த விமானத்தை அல்லாஹ் கடலில் விழாமல் தடுத்து நிருத்தினான்.
ஒவ்வொரு சமுதாயத்துக்கும் கெடு உண்டு. அவர்களின் கெடு வரும்போது சிறிது நேரம் அவர்கள் முந்தவும் மாட்டார்கள். பிந்தவும் மாட்டார்கள். அல்குர்ஆன்.7:34
சுப்ஹானல்லாஹ்.
Subhanallah
ReplyDeleteAllahu Akbar
ReplyDelete