குழப்பத்தினால் பாராளுமன்றம் ஒத்திவைப்பு
பாராளுமன்றம் எதிர்வரும் 23 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார்.
மத்திய வங்கியின் பிணை முறி தொடர்பான அறிக்கையை அடுத்தவாரம் பாராளுமன்றில் முன்வைப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததாக சபாநாயகர் கருஜயசூரிய இன்று -10- காலை அறிவித்தார்.
சிறப்பு பாராளுமன்ற அமர்வு இன்று இடம்பெற்ற நிலையிலேயே சபாநாயகர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிலையில், பிணை முறி விவகாரம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் இன்று சிறப்புரையாற்றினார்.
எனினும் அதற்கு கடுமையான எதிர்ப்பை வெளியிட்ட ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர், சபைக்கு மத்தியில் வந்து கோசமிட்டவாறு குழப்பம் விளைவித்தனர்.
குழப்பத்தையடுத்து கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்காக சபை நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
பின்னர் மீண்டும் விசேட பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகின.
இந்நிலையில் தொடர்ந்து பிரதமர் உரையாற்றிக் கொண்டிருந்த போது மக்கள் விடுதலை முன்னணியினர் மற்றும் கூட்டு எதிரணியினர் சபை அமர்வை வெளிநடப்புச் செய்தனர்.
இதையடுத்து பாராளுமன்றில் லசந்த அழகியவண்ண மற்றும் சுஜீவ சேனசிங்க ஆகியோர் உரையாற்றினர்.
இந்நிலையில் பாராளுமன்றில் விவாதம் நடத்துமாறு கோரியோர் சபையிலிருந்து வெளிநடப்புச் செய்துள்ள நிலையில் சபையில் நாம் எவ்வாறு விவாதம் மேற்கொள்வதென லக்ஷ்மன் கிரியெல்ல சபாநாயகரிடம் கேள்வியெழுப்பினார்.
இதையடுத்து பாராளுமன்றத்தை எதிர்வரும் 23 ஆம் திகதிவரை சபாநாயகர் கரு ஜயசூரிய ஒத்திவைப்பதா அறிவித்தார்.
காடயர் கூட்டம் பாராளுமன்றம் சென்றால் இதல்லாம் சகசமப்பா
ReplyDelete