ஐக்கிய தேசியக் கட்சியை பாதுகாக்க, சஜித் பிரேமதாச முயற்சிக்க வேண்டும்.
பிணைமறி மோசடியில் கையாளப்பட்ட பணம் சாதாரண குடிமகனுடையது. தினமும் கஷ்டப்பட்டு வேலை செய்யும் இந்த நாட்டுப் பிரஜைகளின் சேமலாப நிதியாகும்.
ஆகவே இவ்வாறு சாதாரண மனிதர்களிடம் இருந்து பணத்தை திருடி தனது பையை நிரப்பியவர்களை கைது செய்ய சர்வதேச பொலிஸாரின் உதவியை பெறவும் தாம் தயாராக இருப்பதாக இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
கொழும்பில் இன்று -09- இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
“முன்னாள் அமைச்சர் ஒருவர் பொய் சாட்சியம் வழங்கியுள்ளார்” என்று ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவில் பொய் சொன்ன ஒருவருக்கு மக்களிடம் பொய் கூறுவது பெரிய விடயம் அல்ல.
ஐக்கிய தேசியக் கட்சியின் மிகுதியாக உள்ள பெயரை சரி பாதுகாப்பதற்கு சஜித் பிரேமதாச போன்றோர் முயற்சிக்க வேண்டும்.
ஐக்கியமும் இல்லை தேசியமும் இல்லை.தற்போது உள்ள கட்சியையாவது பாதுகாத்துக்கொள்ளுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாட்டில் நடைபெற்ற பிணை முறி மோசடியில் மத்திய வங்கியின் ஆளுநர் என்ற அடிப்படையிலேயே அர்ஜூன் மகேந்திரன் தொடர்புபட்டுள்ளார். ஆகவே அவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
Enemy of Ranil
ReplyDelete