ஹஸன் அலி, கிடுகிடு என முன்னேற்றம்
உலக கிரிக்கெட் அரங்கில் துடுப்பாட்டம், பந்து வீச்சு மற்றும் ஆல்ரவுண்டர் தொடர்பாக வீரர்களின் தரவரிசைப் பட்டியல் அவ்வப்போது வெளிவரும்.
அப்படி இந்த வருடத்தின் ஆரம்பத்தில் 85-வது இடத்தில் இருந்த பாகிஸ்தான வீரர் தற்போது முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா? நம்பி தான் ஆக வேண்டும்.
ஒருநாள் போட்டிகளுக்கான ஐ.சி.சி தரவரிசை பட்டியலில் இந்த வருடம் பெரிய அளவில் சாதித்தது ஹஸன் அலி மட்டுமே என்று கூறலாம்.
தற்போது இந்த வருட இறுதியில் வெளியிடப்பட்ட இந்த பட்டியலில் 759 புள்ளிகளுடன் இவர் முதல் இடத்தில் உள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு அயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான ஹசன் அலி தற்போது வரை 26 ஒருநாள் போட்டிகளில் 56 விக்கெட்டுகள் விழ்த்தியுள்ளார்.
இவரின் சராசரி 19.82, இவர் அதிகபட்சமாக ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி 34 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து சாதனை படைத்துள்ளார்.
இப்படி ஒரே ஆண்டில் தன்னுடைய திறமையால் முதல் இடத்திற்கு வந்துள்ள ஹசன் அலிக்கு தற்போது வயது 23 மட்டுமே ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பல வருடங்கள் முஸ்லீம் காங்கிரசில் இருந்து தற்போது மக்கள் காங்கிரசில் சாதனை படைப்பவரும் ஹசன் அலி தானே
ReplyDelete