Header Ads



ஜனாதிபதியாகும் ஆசையில் சம்பிக்க

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக ஜிஹாத் எனும் நூலை வெளியிட்டு, இனவாதத்தை விதைத்ததில்  முதன்மையானவரான சம்பிக்க ரணவக்க தலைமையில் ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய குழு கூட்டம் நடந்திருப்பதானது, ஐக்கிய தேசிய கட்சியானது இனவாதிகளின் முழுமையான பிடிக்குள் சென்றுள்ளதை எடுத்துக் காட்டுகிறது.

இன்று -07- ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய குழு கூட்டமானது, அமைச்சர் சம்பிக்க ரணவக்க தலைமையில் இடம்பெற்றுள்ளது. இந்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க தான் இனவாதிகளின் தந்தை. இன்று, அதிகமாக துள்ளிக்கொண்டிருக்கும் ஞானசார தேரரின் உள்ளங்களில் இனவாத சிந்தனைகள் பெருக்கெடுக்க, இவர் அந் நேரத்தில் வெளியிட்டு வந்த கருத்துக்களும் காரணமாக அமைந்திருக்கலாம். ஞானசார தேரர் மற்றும் அமைச்சர்  சம்பிக்க ரணவக்க ஆகியோர் ஒரு காலத்தில் ஒன்றாக பயணம் செய்தவர்கள். அதனை, அவர் தனது வாயாலேயே ஏற்றுக்கொண்டுமுள்ளார்.

இன்றும், இவர் தான், ஞானசார தேரரை இயக்குகுறாரா என்ற பலத்த சந்தேகம் உள்ளது. அளுத்கமை கலவரத்தை தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஞானசார தேரரை கைது செய்ய தயாரான போது, அதனை இவரே தடுத்து நிறுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பகிரங்க குற்றச் சாட்டுக்களை முன் வைத்துமுள்ளார். இப்படியான ஒருவர் ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தை நடாத்தும் அளவு, அக் கட்சியினுள் பலமிக்கவராக திகழ்கிறார்.

இதில் கவலையான விடயம் என்னவென்றால், ஐக்கிய தேசிய கட்சியானது இனவாதிகளின் முழுமையான பிடிக்குள் சென்றுள்ள போதும், எமது முஸ்லிம் மக்கள், அதிகம் ஐக்கிய தேசிய கட்சியையே ஆதரிக்கின்றனர். இன்னும், முஸ்லிம் மக்கள் ஐக்கிய தேசிய கட்சியை ஆதரிப்பார்களாக இருந்தால், முஸ்லிம்கள் மிகக் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. எதிர்வரும் தேர்தலில் முஸ்லிம்கள் ஐக்கிய தேசிய கட்சியை ஆதரிப்பதானது , தங்களது தலைகளை தாங்களே பொறிக்குள் வைத்துள் கொள்வது போன்றாகும்.

அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஜனாதிபதியாகும் ஆசையில் இனவாதத்தை மிகவும் நிதானமாக கையாண்டு வருகிறார். இருந்தாலும், இடைக்கிடையே ஏதேனும் சொல்லிக்கொண்டே இருப்பார். இன்று, அவர் பெரும் இனவாதியாக தோன்றாமல் இருக்கலாம். அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய குழு கூட்டத்தை நடாத்தியுள்ளார் என்பதற்கும் ஞானசார தேரர் ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய குழு கூட்டத்தை நடத்தியுள்ளார் என்பதற்கும் இடையில் எந்த வேறுபாடுமில்லை. எதிர்வரும் தேர்தலில் கட்சி சிந்தனைகளை மறந்து முஸ்லிம்கள் அனைவரும் ஒருமித்து ஐக்கிய தேசிய கட்சியை எதிர்த்து பாடம் புகட்ட வேண்டும்.

அ அஹமட்,
ஊடக செயலாளர்,
முஸ்லிம் முற்போக்கு முன்னனி.

11 comments:

  1. Ok.. I.agree with.. What is the solution?? Which party Muslim should support???

    ReplyDelete
  2. All these old politicians will never end their communal activities to keep them in power. The only way to for the Muslims to save themselves and the country is to support the JVP which is only party which is campaigning for a non-communal country.

    ReplyDelete
  3. There is Two options
    1. ACMC - All Ceylon Makkal Congress
    2. JVP

    ReplyDelete
  4. We have to give support to jvp

    ReplyDelete
  5. What use ACMC with Who ?UNP

    ReplyDelete
  6. This time muslims can vote for TNA for their power devolution

    ReplyDelete
  7. இப்போதே...முஸ்லிம் அரசியல்வாதிகள் எல்லாரும் இவரை கண்டால் எழுந்து நின்று சலாம் போடத்தொடங்கி விட்டார்களாமே!

    எல்லாம், இவரு தற்செயலாக ஜனாதிபதியாகி விட்டால், ஏதாவது..பதவி, பணம் என ஐந்த..பத்த..தருவாரு என்று தான்.

    ReplyDelete

Powered by Blogger.