Header Ads



புர்கா அணிந்தபடி, வாக்களிப்பு நிலையம் போகலாம் - மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட்


-AAM. Anzir-

எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் புர்கா அணிந்தபடி முஸ்லிம் பெண்கள் வாக்களிப்பு நிலையத்திற்கு செல்ல முடியுமென, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் M.M. மொஹமட்  www.jaffnamuslim.com இணையத்திடம் தெரிவித்தார்.

அவர் இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

சமூக ஊடங்களிலும், வேறு தளங்களிலும் புர்கா அணிந்தபடி முஸ்லிம் பெண்கள் வாக்களிப்பு நிலையத்திற்கு செல்ல முடியாதென  தவறான தகவல் பரப்பப்படுகிறது.

இப்படியொரு அறிவித்தலை தேர்தல் ஆணைக்குழுவோ, அல்லது அதன் தவிசாளரோ அல்லது பிரதித் தேர்தல்கள் ஆணையாளரோ சொல்லவில்லை. அப்படியிருக்க ஏன் இப்படியொரு பொய் தகவலை பரப்புகிறார்கள்? என புரியவில்லை.

தேர்தலில் வாக்களிக்க வருகிறவர், யாரென அடையாளம் காண்பது முதன்மையானது.

எந்தவொரு நபரும் வாக்களிப்பு நிலையத்தில் தனக்கான வாக்குச்சீட்டை பெறமுன்னர், தனது அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும். 

அதாவது முஸ்லிம் பெண்கள் புர்கா அணிந்திருந்தால், அதனை நீக்கி தமது முகத்தை காண்பிக்கும் சமகாலத்தில், தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்தம் உரிய ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

இதன்பின்னர் குறித்த வாக்காளர் வாக்குச்சீட்டில் புள்ளடியிட்டு, தனது வாக்கை செலுத்திவிட்டுச் செல்லமுடியும்.

பரீட்சை எழுதுகிறவர்கள், மக்கா மதீனா செல்பவர்கள், மற்றும் வெளிநாடுகளுக்கு போக விமான நிலையங்கள் செல்பவர்களும் இவ்வாறுதான் தேவையான நேரத்தில் புர்காவை அகற்றி முகத்தை காண்பிக்கத்தான் வேண்டும். 

அதுபோன்றுதான் வாக்களிக்க முன்னர், தமது அடையாளத்தை உறுதிப்படுத்துகிற நேரத்திலும் முகத்தை காண்பிக்க வேண்டும்.

இதன் அர்த்தம், புர்கா அணியலாகாது என்பதல்ல. நாம் சட்டத்தில் உள்ளதையே அமுல்படுத்துகிறோம். 

மேலும் புர்கா மாத்திரமல்ல கருப்புக் கண்ணாடி மற்றும் ஹெல்மட் அணிந்தபடியும் வாக்களிக்க முடியாதெனவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் மொஹமட் சுட்டிக்காட்டினார்.

1 comment:

  1. Problems is not a burka, people who weare burka don’t know how to protect the burka. Instead of that they protesting for that make more enemies. When ever any law enforcement comes we should support them. Which will help us to implement our religious rights easier in a non Muslims country.

    ReplyDelete

Powered by Blogger.