மதுபான வர்த்தமானியை, மீளப்பெற அமைச்சரவை இணக்கம்
மதுபானங்கள் விற்பனைத் தொடர்பில் நிதி அமைச்சு வெளியிட்டுள்ள வர்த்தமானியை நீக்குவதற்கு அமைச்சரவை ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (16) ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பெண்கள் மதுபான கொள்வனவு செய்தல் , விற்பனை மற்றும் மதுபான நிலையங்களை 10 மணிவரை திறந்திருப்பது தொடர்பாக நிதிஅமைச்சர் மங்கள சமவீரவின் கையெழுத்துடன் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டிருந்தது.
கடந்த வாரம் நிதி அமைச்சால் இதுதொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானியை நீக்குவது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அகலவத்தை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது உரையாற்றியிருந்த நிலையில், இன்று கூடிய அமைச்சரவை குறித்த வர்த்தமானியை நீக்குவதற்கு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
Post a Comment