அஸ்கிரிய மஹாநாயக்கர் பொதுமக்களுக்கு விடுத்த கோரிக்கை
தேர்தல் காலப்பகுதியினில், புத்திசாதுரியத்துடன் செயல்படுமாறு அஸ்கிரிய பிரிவின் மஹாநாயக்கர் வரக்காகொட ஸ்ரீ ஞானரத்தின தேரர் பொதுமக்களை கோரியுள்ளார்.
ஊடகங்கள் மத்தியில் இன்று அவர் சிறப்புரை ஒன்றை ஆற்றிய போதே இதனை தெரிவித்தார்.
தேர்தல் காலப்பகுதியில் தூற்றுதல், சண்டைகள் ஏற்படக் கூடும்.
எனவே வாக்காளர்கள் சிந்தித்து செயற்பட வேண்டும்.
தாம் விரும்பிய வேட்பாளர்களை தெரிவு செய்து அமைதியானதும் சமாதானதுமான தேர்தலை நடாத்த அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என அஸ்கிரிய பிரிவின் மஹாநாயக்கர் வரக்காகொட ஸ்ரீ ஞானரத்தின தேரர் தெரிவித்துள்ளார்.
Post a Comment