குழப்பியதால் நிலைமை மோசமடைந்தது - மரிக்கார்
பாராளுமன்றம் சண்டைபிடிக்கும் இடமல்ல. தம்மீது தாக்குதல் நடத்தியதாலேயே பதிலுக்கு தாக்குதல் நடத்தவேண்டி ஏற்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி தெரிவித்தார். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் நேற்று சபையில் இடம்பெற்ற கைகலப்பு தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் பாராளுமன்ற குழு அறையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தனர். இதில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறினார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.எம்.மரிக்கார் மற்றும் ஹெக்டர் அப்புஹாமி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
திறைசேறி பிணைமுறி விவகாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை குற்றவாளியாக்குவதற்கு சதித்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
இதன் ஒரு அங்கமாகவே பாராளுமன்றத்தில் குழப்பம் ஏற்படுத்தப்பட்டது. பாராளுமன்றம் சண்டையிட்டுக் கொள்வதற்கான இடமல்ல. எம்மீது தாக்குதல் நடத்தியதால் திருப்பித் தாக்கவேண்டி ஏற்பட்டது. பதில் தாக்குதல் நடத்துவதைவிட எமது பாதுகாப்புத் தொடர்பிலேயே தாம் கூடுதல் அக்கறை காண்பித்ததாகவும் கூறினார்.
இங்கு கருத்துத் தெரிவித்த எஸ்.எம்.மரிக்கார் எம்பி, பிணைமுறி குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு ஒரு வார காலம் அனுமதி கோரப்பட்டது. எனினும், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் பாராளுமன்ற செயற்பாடுகளைக் குழப்பியதால் நிலைமை மோசமடைந்தது.
But "News First parliament reporters" are saying the Joint opposition, just simply touch you only.....then you are the one who hit and fought with them...!!!
ReplyDeleteIf you see sinhala and Tamil news of them they used words: "Apdi sadayaha marikkaar MP yai tattinaargal...patilukku Marikkar viratti viratti adittaar" endru...
So hope you people (UNPs) be aware of of News First and My3 gang too.. pls wake-up