நண்பரிடம் கண் கலங்கிய மஹிந்த
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது நெருங்கிய நண்பரிடம் தனது ஆதங்கங்களை வெளியிட்டு கண் கலங்கியதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கையின் பிரபல நடிகர் ஸ்ரீயந்த மென்டிஸ், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார். இதன்போது வருத்தத்துடன் பல விடயங்களை மஹிந்த கூறியுள்ளார்.
கடந்த 4ஆம் திகதி கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் நடைபெற்ற தனது மகளின் திருமணத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுப்பதற்காக, மஹிந்த ராஜபக்சவை சந்திப்பதற்கு நடிகர் மென்டிஸ் அவரது விஜேராம இல்லத்திற்கு சென்றுள்ளார்.
இதன்போது மஹிந்தவினால் விசேட வரவேற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
“ஸ்ரீயந்த எனக்கு விசேடமான ஒருவராகும். ஸ்ரீயந்தவின் கோரிக்கைகளுக்கு முடியாதென்று கூறவே முடியாது. நான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் என்னை சந்திப்பதற்கு பல கலைஞர்கள் வருகை தருவார்கள். அவர்கள் என்னை சுற்றியே இருந்தனர். இந்த இடத்தில் நடித்து, நடனமாடி பாடல் பாடி மகிழ்ந்த பலர் உள்ளனர். இறுதியில் அதிகாரம் இல்லாமல் போனவுடன் அந்த நபர்களை தேடி கொள்ளவே முடியவில்லை. எனினும் ஸ்ரீயந்த நம்முடனே தொடர்ந்து இருந்தார்....” என மஹிந்த வருத்தத்துடன் அந்த நடிகரிடம் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய திருமணத்திற்கு சென்ற மஹிந்தவை சுற்றி இளைஞர்கள் கூடி செல்பி புகைப்படம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment