Header Ads



எந்த கட்சியும் பெரும்பான்மை பெறாது - கூட்டணியை ஏற்படுத்த நேரிடும்...!


இந்த முறை உள்ளாட்சி தேர்தலில் எந்த கட்சியாலும் பெரும்பான்மை பலம் பெற முடியாது என்று கூறப்படுகிறது.

எனவே கட்சிகள் ஆட்சி அமைப்பதற்கு கூட்டணியை ஏற்படுத்த நேரும் என்று பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

எந்த நாட்டிலும் இல்லாதவாறு இலங்கையின் தேர்தல் முறைமை உள்ளது. ஒருவகையில் அது நல்லதாக இருந்தாலும், ஜனநாயகம் முழுமையாக பின்பற்றப்படாத நாடாக இலங்கை இருப்பது, தேர்தல் முறைமையை பாதிக்கிறது.

இந்த தேர்தல் முறைமையினால் அனைத்து கட்சிகளுக்கும் ஆசனங்களைப் பெற்றுக் கொள்ள வாய்ப்பு உள்ளது.

ஆனால் தேர்தலுக்குப் பின்னர் கட்சித் தாவல்கள் என்பன நிகழக்கூடும் என்பது பாதகமான விடயம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.