Header Ads



"ஜனாதிபதி முதலில் தனது, கட்சியை தூய்மைப்படுத்த வேண்டும்"

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முதலில் தனது கட்சியை தூய்மைப்படுத்திக்கொள்ள வேண்டுமென ராஜாங்க அமைச்சர் திலிப் வெதாரச்சி தெரிவித்துள்ளார்.

தங்காலையில் இன்றைய -16- தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி இன்று அரசாங்கத்தை தூய்மைப்படுத்துவது பற்றி பேசுகின்றார், எனினும் அவரால் தனது கட்சியை தூய்மைப்படுத்திக்கொள்ள இதுவரையில் முடியவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சியின் உதவியினால் இன்று ஜனாதிபதி இந்தப் பதவியை வகிக்கின்றார்.

அரசாங்கத்தை தூய்மைப்படுத்த முன்னதாக சுதந்திரக் கட்சியை தூய்மைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

தொடர்ச்சியாக அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டால் ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய சாத்தியம் உண்டு.

எஸ்.பி. திஸாநாயக்க உள்ளிட்ட புண்ணிய அமைச்சர்கள் ஐக்கிய தேசியக் கட்சியை இல்லாமல் செய்ய முயற்சிக்கின்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சி பெருமை மிக்க ஓர் கட்சியாகும், தங்களது தொகுதியில் வெற்றியீட்ட முடியாத நபர்கள் ஐக்கிய தேசியக் கட்சியை இல்லாமல் செய்ய முயற்சிக்கின்றனர் என திலிப் வெதாரச்சி தெரிவித்துள்ளார்.

1 comment:

Powered by Blogger.