அணு ஆயுதங்களை இயக்குவதற்கான ஸ்விட்ச் என், மேஜையின் மீது தயார் நிலையில் உள்ளது
2018 ஆம் ஆண்டு பிறந்துவிட்ட நிலையில், வட கொரியா அதிபர் கிம் ஜாங் தனது நாட்டு மக்களுக்கு ஊடகம் வாயிலாக புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆனால், வாழ்த்துடன் சேர்த்து வட கொரியாவின் இலக்கு தான் உலக நாடுகள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவை வீழ்த்துவதே தங்களின் இலக்கு என்றும் கூறிவருகிறது. இந்நிலையில் அந்நாட்டு மக்களிடம் நேற்று ஊடகம் வாயிலாக உரையாடிய வடகொரியா அதிபர், வட கொரியா அணுசக்தி நாடாக உருவெடுத்து வருகிறது.
கடந்த 2017 ஆம் ஆண்டில் நாம் நடத்திய அணு சக்தி சோதனைகளே அதற்கு உதாரணம். இனி வரும் ஆண்டில் அணு ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் பெரியளவில் தயாரிப்பதே நம் இலக்கு.
அணு ஆயுதங்களை இயக்குவதற்கான ஸ்விட்ச் என்னுடைய மேஜையின் மீது தயார் நிலையில் உள்ளது.
எனது நாட்டின் அணுசக்தி படைகள் அமெரிக்காவிடமிருந்து நாட்டைக் காக்கும் சக்தி வாய்ந்த பாதுகாப்பு அரண்களை ஏற்படுத்தியுள்ளன.
வடகொரியாவின் அணுஆயுதங்கள் அமெரிக்காவின் முக்கிய இடங்களை தாக்கும் திறன் படைத்தவை என்று கூறியுள்ளார்.
அணுவாயுதம் இருப்பதைவிட இவரின் நம்பிக்கையான, பயமற்ற வார்த்தைகளே அமே வை யோசிக்க வைக்கின்றது. ஈராக்கில் இல்லாத அணுவாயுதத்தை தேடித்தான் அந்நாட்டையே இல்லாமல் செய்தார்கள்.
ReplyDeleteஅப்படி அழிவதைவிட , அழிக்கப்பட்டாலும் பின்னர் பேசும்போது உன்மயில் நாம் வெண்றோமா எனும் சந்தேகத்தை அழித்தவர்களுக்கு உண்டாகும் விதத்தில் நம்தோல்வி இருக்கவேண்டும். ஹிட்லரும் ஒரு உதாறணமே.