Header Ads



சாய்ந்தமருது பள்ளிவாசலுக்கு நெருக்கடி

மதத் தலைவர்கள் மத ஸ்தலங்களை கொண்டு தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது. மீறும் பட்சத்தில் மதத் தலைவர்களின் குடியுரிமை 4 வருடங்களுக்கு மறிக்கப்படும் இச்சட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பள்ளிவாசல் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது என உதவி  தேர்தல் ஆணையாளர் திலின விக்கிரமரட்ன தெரிவித்ததுடன் மக்கள் பணிமனையினையும் அகற்றுமாறும் உத்தரவிட்டார்.

நடைபெறவிருக்கும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும்  வேட்பாளர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆராயும் உயர்மட்ட கலந்துரையாடல் இன்று (06) சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இதில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் உதவி தேர்தல் ஆணையாளர் திலின விக்கிரமரட்ன, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் உள்ளிட்ட பொலிஸ் உயர் அதிகாரிகள், வேட்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

இந்துக் கோவில், கிறிஸ்தவ தேவாலயம், பண்சாலை, பள்ளிவாசல்கள் போன்றவற்றின் மதத் தலைவர்கள், மத ஸ்தானங்களை கொண்டு தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது. இது தேர்தல்கள் சட்டத்தின் 81 பிரிவின் இது குற்றமாகும். மீறிவோருக்கு குடியுரிமை 4 வருடங்களுக்கு பறிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இதனடிப்படையில் சாய்ந்தமருது பள்ளிவாசல் தலைவர் உள்ளிட்ட நிர்வாகத்தினர் தேர்தல் நடவடிக்கைகள் ஈடுபட முடியாது. அத்தோடு பள்ளிவாசல் உள்ளேயும் வெளியேயும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் மதத் தலைவர்கள் உள்ளிட்ட உலமாக்கள் செயற்பட முடியாது அத்துடன் தேர்தலுடன் சம்பந்தப்பட்ட காரியாலயங்களைக் கூட திறக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை அமைதியான முறையில் ஜனநாயக முறையில் நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கண்டிப்பான சட்டங்களை அமுல்படுத்தியுள்ளார். இதற்கு கட்டுப்பட்டு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நடக்க வேண்டும் அத்துடன் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

3 comments:

  1. சாய்ந்தமருது பள்ளிவாசலுக்கோ அல்லது அந்த ஊர் மக்களுக்கோ ( மிகவும் பண்பானவர்களும், நல்லொழுக்கமுடையவர்களும், படித்தவர்களும் ஆகும் ) எந்த பிரச்சினையும் கிடையாது. அங்கிருக்கும் சுயேட்சை குழுவுக்கும் அதன் பின்னால் ஊர் வெறிபிடித்து அலையும் கூட்டத்துக்குமே நெருக்கடி. இன்னும் ஒன்றும் குடி மூழ்கி போய்விட வில்லை. உடனடியாக தேர்தல் ஆணையத்துக்கு சரியான விளக்கம்( சாய்ந்தமருது பிரகடனத்துக்கும், தேர்லில் நிட்பதட்கும் சம்பந்தம் இல்லை என்றால் போதும்.) ஒன்றை அளித்து அதனை பத்திரிகையிலும் அறிவித்தால் எதிர்காலத்தில் சட்ட ரீதியான விடயங்களுக்கு முகம் கொடுக்கலாம். ஏனெனில் ஹக்கீம் அவர்களின் தலைமைத்துவம் இந்த தேர்தலில் நிட்சயம் தோற்கடிக்க பட வேண்டும். இது முஸ்லிம்களுக்கு கிடைத்த மாபெரும் சந்தர்ப்பம். இதை இலங்கை வாழ் முஸ்லிம்கள் மிகவும் புத்தி சாதுரியமாக பயன்படுத்த வேண்டும் அதிலும் முக்கியமாக கிழக்கு மாகாண மக்கள் பயன்படுத்த வேண்டும் அதிலும் முக்கியமாக அம்பாறை மாவட்ட மக்கள் பயன்படுத்த வேண்டும். அதிலும் கல்முனை மாநகர மக்கள் மிகவும் விழிப்பாக இருந்து சோர்வடையாமல் செயட்பட வேண்டும் என்பதை மிகவும் கவனத்தில் கொண்டு வருகிறோம்.

    " நிஸாம் காரியப்பருக்கு ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறோம்.. புத்தி கார பிள்ளைக்கு செம்பருத்தியம் பூ நஞ்சா ? இந்த தேர்தலில் நீர் பலிக்கடா ஆவதை நாங்கள் விரும்பவில்லை. சிந்தித்து செயட்படவும். நீர் ஒரு சமாதானம் பேசுபவராக இருக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. அது உமது எதிர்காலத்துக்கும் நல்லது. முஸ்லீம் சமூகத்துக்கும் நல்லது.

    ReplyDelete
  2. சாய்ந்தமருது பள்ளிவாசலுக்கோ அல்லது அந்த ஊர் மக்களுக்கோ ( மிகவும் பண்பானவர்களும், நல்லொழுக்கமுடையவர்களும், படித்தவர்களும் ஆகும் ) எந்த பிரச்சினையும் கிடையாது. அங்கிருக்கும் சுயேட்சை குழுவுக்கும் அதன் பின்னால் ஊர் வெறிபிடித்து அலையும் கூட்டத்துக்குமே நெருக்கடி. இன்னும் ஒன்றும் குடி மூழ்கி போய்விட வில்லை. உடனடியாக தேர்தல் ஆணையத்துக்கு சரியான விளக்கம்( சாய்ந்தமருது பிரகடனத்துக்கும், தேர்லில் நிட்பதட்கும் சம்பந்தம் இல்லை என்றால் போதும்.) ஒன்றை அளித்து அதனை பத்திரிகையிலும் அறிவித்தால் எதிர்காலத்தில் சட்ட ரீதியான விடயங்களுக்கு முகம் கொடுக்கலாம். ஏனெனில் ஹக்கீம் அவர்களின் தலைமைத்துவம் இந்த தேர்தலில் நிட்சயம் தோற்கடிக்க பட வேண்டும். இது முஸ்லிம்களுக்கு கிடைத்த மாபெரும் சந்தர்ப்பம். இதை இலங்கை வாழ் முஸ்லிம்கள் மிகவும் புத்தி சாதுரியமாக பயன்படுத்த வேண்டும் அதிலும் முக்கியமாக கிழக்கு மாகாண மக்கள் பயன்படுத்த வேண்டும் அதிலும் முக்கியமாக அம்பாறை மாவட்ட மக்கள் பயன்படுத்த வேண்டும். அதிலும் கல்முனை மாநகர மக்கள் மிகவும் விழிப்பாக இருந்து சோர்வடையாமல் செயட்பட வேண்டும் என்பதை மிகவும் கவனத்தில் கொண்டு வருகிறோம்.

    " நிஸாம் காரியப்பருக்கு ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறோம்.. புத்தி கார பிள்ளைக்கு செம்பருத்தியம் பூ நஞ்சா ? இந்த தேர்தலில் நீர் பலிக்கடா ஆவதை நாங்கள் விரும்பவில்லை. சிந்தித்து செயட்படவும். நீர் ஒரு சமாதானம் பேசுபவராக இருக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. அது உமது எதிர்காலத்துக்கும் நல்லது. முஸ்லீம் சமூகத்துக்கும் நல்லது.

    ReplyDelete
  3. இந்த சட்டம் இலங்கையில் எல்லா ஊர்களுக்கும் உரிய சட்டம் என்பதை மஸ்ஜித் நிர்வாகங்களும் தெரிந்து கொள்வது சிறந்தது

    ReplyDelete

Powered by Blogger.