ரணில் ஏன், விலக வேண்டும்..? சந்திரிக்கா ஆவேசம்
பிணைமுறி விவகாரம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாராநாயக்க குமாரதுங்க கருத்துரைத்திருக்கிறார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நியமனம் செய்யப்பட்டவர் திருடினார் என்பதற்காக பிரதமரைக் குற்றம் கண்டு பிடிக்க முடியாது.
பிரதமர் நியமித்தவர் திருடினார் என்பதற்கு பிரதமர் பொறுப்புக் கூறக் கடமைப்பட்டுள்ளார் தான். அதற்காக பிரதமர் அவருடன் சேர்ந்து திருடினார் என ஆகிவிடாது. இவ்வாறிருக்கையில், பிரதமர் ஏன் பதவி விலக வேண்டும்.
மஹிந்த ராஜபகஷவின் காலத்தில் இதுபோன்ற எந்தவொரு விசாரணையும் இடம்பெறவுமில்லை. குற்றவாளிகள் கண்டறியப்படவுமில்லை என்று குறிப்பிட்ட அவர், ஜனாதிபதியும் பிரதமரும் ஒன்றிணைந்து மத்திய வங்கி முறி மோசடி தொடர்பில் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment