மரத்தை வெட்டிய, வேட்பாளர் கைது
-ஆர்.மகேஸ்வரி-
மிடியாபாம் காட்டில் மரம் வெட்டிக்கொண்டிருந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் பொதுஜன முன்னணி சார்பில் போட்டியிடும் வெங்கல- செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் குறித்த பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்ட போது கைதுசெய்யப்பட்ட வேட்பாளரும் மற்றும் சிலரும் மரங்களை வெட்டிக்கொண்டிருந்ததாகவும், சந்தேகநபர்களால் வெட்டப்பட்ட 21 மரக்குற்றிகளையும் கைப்பற்றியதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Post a Comment