Header Ads



ஐ.தே.க. யின் கோரிக்கையை, அடியோடு நிராகரித்த ஜனாதிபதி

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணை அறிக்கையை உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குப் பின்னர் பகிரங்கப்படுத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடியோடு நிராகரித்துவிட்டார் என அறியமுடிகின்றது.

""சட்டமானது தனது கடமையை உரியவகையில் நிறைவேற்றவேண்டும். அத்துடன், ஊழல்களை அங்கீகரிக்கும் வகையில் என்னால் செயற்படமுடியாது. இந்த விடயத்தில் முன்வைத்த காலை நான் பின்வைக்க மாட்டேன்'' என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக இடித்துரைத்துள்ளார்.

1,400 பக்கங்களடங்கிய பிணைமுறி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்றுமுன்தினம் கையளிக்கப்பட்டது. இந்த அறிக்கையை அடுத்தவாரமளவில் அவர் பகிரங்கப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது.

தேர்தலொன்று நடைபெறவுள்ள தறுவாயில் இந்த அறிக்கை வெளிவருமானால் அது ஒருதரப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமையுமென்பதை சுட்டிக்காட்டியே, தேர்தலுக்குப் பின்னர் அதை வெளியிடுமாறு ஐ.தே.கவிலுள்ள சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் நட்புரீதியில் ஜனாதிபதியிடம் கோரினர் எனத் தெரியவருகின்றது.

1 comment:

  1. இந்தச் செய்தி உண்மையானால், ஐ.தே.க.யின் பெறுபேறுகளை இப்பொழுதே கூறிவிடலாம்.

    ReplyDelete

Powered by Blogger.