Header Ads



கல்முனையை முஸ்லிம்கள், தனித்துவமாக ஆளக்கூடிய வாய்ப்பு கிடைக்குமா..?


-எம்.வை.அமீர்-

நடக்கவிருக்கின்ற தேர்தலானது பிரதேச ரீதியாகவும் தேசிய அளவிலும் ஏன் சர்வதேச அளவிலும் உற்று நோக்கப்படும் தேர்தலாகவே அமையும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் கல்முனை மாநகரசபையின் முன்னாள் பிரதி முதல்வருமான ஏ.எல்.அப்துல் மஜீத் தெரிவித்தார்.

கல்முனை மாநகரசபைக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் ஐக்கியதேசிய கட்சியில் போட்டியிடும் 23 ஆம் இலக்க வேட்பாளர் ஏ.எம்.முபாறக்கை ஆதரித்து இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2015 ஆண்டு அமைக்கப்பட்ட நல்லாட்சி சந்திக்கும் முதல் தேர்தல் என்றும் நல்லாட்சி தொடர்பில் மக்களின் அபிப்பிராயத்தை அறியக் கூடியதாக  இத்தேர்தல்  அமையும் என்றும் சர்வதேசம் இந்தத் தேர்தலை மிக முக்கியத்துவம் மிக்கதாக அவதானித்துக்கொண்டிருப்பதாகவும் மறுபுறம் மகிந்த ராஜபக்சவை பிரதமாராக அமர்த்துவதற்கு ஒரு முன்னோட்டம் பார்க்கும் தேர்தலாகவும் அமையவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இன்றைய முக்கியத்துவமிக்க காலகட்டத்தில் கல்முனை மாநகரசபையை முஸ்லிம்கள் தனித்துவமாக ஆளக்கூடிய வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி இருப்பதாகவும் கல்முனையின் நலன்பற்றியும் முஸ்லிம்களின் அடையாளம் பற்றியெல்லாம் யோசிப்பவர்களும் நடைபெறவுள்ள தேர்தலில் எடுக்கப்போகும் முடிவில்தான் கல்முனையின் எதிர்காலம் தங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.