Header Ads



தேர்தல் முடிவுகள் ரிஷாட் பதியுதீனை, முஸ்லிம் சமூக தலைவனாக இனங்காணும் - ஜவ்பர்கான்

மர்ஹூம் அஷ்ரபின் குணாம்சங்களை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனில் தாங்கள் காண்பதாக காத்தான்குடி நகரசபையின் மக்கள் காங்கிரஸின் முதன்மை வேட்பாளரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான ரீ.எல்.ஜவ்பர்கான் தெரிவித்தார்.

காத்தன்குடி மக்களின் அரசியலையும், முஸ்லிம் காங்கிரஸின் அரசியலையும் நாங்கள் வேறுபடுத்திப் பார்க்க முடியாது. முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால வளர்ச்சியில் காத்தன்குடியே மையப்புள்ளியாக இருந்தது என்ற உண்மை பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். 

மர்ஹூம் அஷ்ரபுடன் இணைந்து காத்தான்குடி பிரதேசத்தில் அரசியலை மேற்கொண்டவர்களில், இன்னும் உயிருடன் இருப்பவர்கள் நானும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களுமே.

அஷ்ரபின் மடியில் இருந்துகொண்டு அரசியல் பாடம் பெற்றவர்கள் நாங்கள். அவரது அரசியல் பாசறையில் நாங்கள் கற்ற பாடம்தான் இன்று அரசியலில் நாங்கள் தொடர்ந்தும் ஈடுபடுவதற்கு காரணமாக அமைகின்றது.

அஷ்ரபின் துணிவு, தைரியம், சமூகத்தின் மீதான தீராத வெறி, போராட்டக் குணம், அநீதிகளைக் கண்டு வெகுண்டெழும் தன்மை ஆகியவற்றை நான் ரிஷாட் பதியுதீனில் காண்கின்றேன்.

மொத்தத்தில் எனது பார்வையில் நான் ரிஷாட் பதியுதீனை அஷ்ரபின் மறுஉருவமாகவே காண்கின்றேன்.

அஷ்ரபின் மறைவின் பின்னர் பதினேழு வருடங்களாக முஸ்லிம் காங்கிரஸின் பலத்தை வைத்துக்கொண்டு சமூகத்தை ஆண்டவர்கள், நமக்கு உருப்படியாக எதுவுமே செய்யாத நிலையிலேயே மக்கள் புதிய மாற்றத்துக்கு தயாராக உள்ளனர்.

உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை முஸ்லிம் சமூகத்தின் தலைவனாக இனங்காணும் என்பதே எனது நம்பிக்கையாகும். 

    

3 comments:

  1. We believe in whatever you have said.
    Aameen, we pray the Almighty for the same !

    ReplyDelete
  2. கௌரவ தேசிய தலைவர் அவர்களே!

    உங்களை நாங்கள் எங்கள் தேசிய தலைவராக வரவேப்பதில் எந்த ஐயமுமில்லை.மறைந்த மாமனிதன் அஷ்ரப் அவர்களுக்கு பிறகு நீங்கள்தான் எங்கள் சமூகத்தின் முன்மாதிரியும், பாதுகாவலனும். அதில் எந்த முரண்பாடுமில்லை. சமூகத்திக்காக நீங்கள் செய்தவற்றை எங்கள் மக்கள் காலத்தாலும் மறக்கமுடியாது. மஹிந்தவிடம் எப்படிச்சண்டை போட்டீர்கள், மஹிந்தவும் அவருடைய சகாக்கள் எவ்வாரெல்லாம் உங்களை தூத்தினர்களன்று நாங்கள் எல்லோரும் நன்கறிவோம், மேலும் இனவாதிகள் எவ்வளவு பிரச்னைகளை உண்டுபண்ணினார்கள், பண்ணுகிறார்கள், இருந்தும் நீங்கள் கொஞ்சம்கூட அசரது அஞ்சாது மக்களே எனது முழுமூச்சென்று சேவை செய்யும் உங்களுக்கு இந்தநாட்டு நமது சமூகம் உங்களை கைவிடக்கூடாது. அப்படிவிட்டால் நாம் பல மோசமான விளைவுகளை மிகவும் சீக்கிரமாக சந்திக்க நேரிடுமென்பதை இங்கு யாரும் மறக்கக்கூடாது.ஏனனில் ஏனைய முஸ்லீம் தலைவர்கள் எதுவுமே தெரியத்தமாதிரி இருந்துவிட்டு எல்லாம் முடிந்தபிறகுதான் மீடியாக்கு வருவார்கள்.அப்படியானவர்கள் பின்னால் கொஞ்சம் கூத்தாடிகள்.

    சகோதரர்களே! நங்கள் ஒவ்வொருவரும் எங்களையே கேள்விகேக்கவேண்டிய சந்தர்ப்பமிது எங்களுக்கு மீடிய வீரர்கள் தேவையா என்பதை.

    கௌரவ ரிஷாட் பதுர்தீன் அவர்களே, இன்ஷா அல்லாஹ் மிக விரைவில் நீங்கள் ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களின் துஆவோடு எங்களது தேசிய தலைவரகுவீர்கள்.

    ReplyDelete

Powered by Blogger.