மத்திய வங்கி அதிரடி, பர்பச்சுவல் நிறுவன வங்கிக் கணக்குகள் முடக்கம்
இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி மோசடியுடன் சம்பந்தப்பட்ட பர்பச்சுவல் ட்ரஸறீஸ் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
துரிதமான விசாரணைகளை முன்னெடுத்து இலங்கை மத்திய வங்கி அதிரடியாக இந்த நடவடிக்ைகயை எடுத்துள்ளதாக வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள 11 பில்லியன் ரூபாய் நட்டத்தை ஈடு செய்வதற்காக இந்த நடவடிக்ைகயை எடுத்துள்ளதாக கலாநிதி இந்திரஜித் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
2015 மார்ச் முதல் 2016ஆம் ஆண்டுவரை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள 11 பில்லியன் ரூபாய் பணத்தை மீளப்பெற முடியும் என்று அவர் தெரிவித்தார்.
குறித்த நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளை இடைநிறுத்தியுள்ளதாகவும் அதனால், அந்த நிறுவனத்திற்கு எந்தப் பணத்தையும் மீளப்பெற முடியாது என்றும் கலாநிதி குமாரசாமி தெரிவித்தார். அரசாங்கத்திற்குரிய பணத்தை அறவிட்டுக்ெகாள்வதற்காக சட்ட மாஅதிபர் திணைக்களம் வழக்குத் தாக்கல் செய்யும் என்றும் அவர் சொன்னார்.
இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி மோசடிகள் குறித்து நடவடிக்ைக எடுப்பதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு முன்வைத்துள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஆளுநர் உள்ளிட்ட அதிகாரிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் ஊழியர் சேமலாப நிதியத்திற்கு ஏற்பட்ட நட்டத்தை அறவிட்டுக்ெகாள்வது தொடர்பில் வெளிநாட்டு நிபுணர்களின் உதவியைப் பெற்றுக்ெகாள்வதைப் பற்றி ஆலோசித்து வருவதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
2008 ஆம் ஆண்டு முதல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2015ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தலில் தோற்கடிக்கப்படும் வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரணை செய்வதற்குச் சாத்தியமான அனைத்து நடவடிக்ைககளையும் மேற்கொள்ளவுள்ளதாக கலாநிதி குமாரசாமி மேலும் தெரிவித்தார்.
Post a Comment