மடு தேவாலயம் அருகில் பௌத்த விகாரை, மிகப்பெரிய அவமரியாதையாம்..!
மன்னார் மடு தேவாலய நுழைவாயில் அருகாமையில் இராணுவத்தினரால் புத்தர் சிலை ஒன்றை வைத்து பௌத்த விகாரை ஒன்றை அமைப்பதற்கும் எடுக்கும் முயற்சியை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கூறி மன்னார் பிரஜைகள் சங்கங்கள் இரண்டு வட மாகாண கல்வி மற்றும் கலாசார அமைச்சருக்கு கடிதம் மூலம் கோரிக்கை முன்வைத்துள்ளன.
இந்த இடத்தில் சிற்றுண்டிச்சாலை ஒன்றை நடத்திவரும் இராணுவத்தினர் குறித்த இடத்தில் உள்ள மரத்திற்கு கீழ் புத்தர் சிலை ஒன்றை வைத்து பௌத்த விகாரை ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறும் மன்னார் பிரஜைகள் சங்கங்கள் இந்த இடத்தில் இவ்வாறான செயலை செய்ய ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அது மடு தேவாலயத்திற்கு செய்யும் மிகப் பெரிய அவமரியாதை எனவும் குறிப்பிட்டுள்ளன.
இப்போதைக்கும் இவ்விடத்தை வணக்க வழிபாடுகள் நடத்தும் இடமாக இராணுவத்தினர் மாற்றியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள பிரஜைகள் சங்கங்கள் பிரபல கிறிஸ்தவ தேவாலயம் உள்ள இடத்தில் இவ்வாறான செயலை அனுமதிக்க முடியாது என குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளன.
வடக்கில் பல இடங்களில் புத்தர் சிலைகளை வைத்து வணக்க வழிபாடுகளில் ஈடுபடுகின்ற இராணுவத்தினர், அவ்விடத்தை விட்டு செல்லும் போது, சிலைகளை அகற்றாமல் செல்வதன் மூலம் ஏற்படுகின்ற பிரச்சினை, தேசிய ரீதியான பிரச்சினையாக உருவெடுப்பதால் இந்த இடத்தில் புத்தர் சிலையை வைப்பதற்கு முன்னரே இச்செயற்பாட்டை நிறுத்தநடவடிக்கை எடுக்குமாறு மன்னார் பிரஜைகள் சங்கங்கள் இரண்டும் வட மாகாண சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
சரிதான். பறவைகளால் விதைக்கப்பட்டு முளைக்கும் அரசமரங்களும், இராணுவ பொலீஸ் கேம்ப்களில் சிறிதாக வைக்கப்படும் புத்தர் சிலைகளும் காலப்போக்கில் அந்தஇடத்தை விகாரைக்குரிய இடமாக மாற்றிவிடுகிறது.
ReplyDeleteஎங்கே நம் அந்தோணி அஜன்.
ReplyDeleteமன்னார் மாவட்ட தமிழ் கிருஸ்துவ பயங்கரவாதிகளின் ஆட்டம் அடங்க இதெல்லாம் கொஞ்சம் அவசியம்
ReplyDeleteஇல்லை Gt x இங்கு உள்ளவர்களின் மடத்தனத்துக்காக ,நாம் கண்ணைமூடி அனைத்தையும் சரிகாணக்கூடாது. அனீதியை ஆதரிக்கவே கூடாது. இன்றுஅவருக்கு நாளை நமக்கு(அல்லாஹ் பாதுகாப்பானாக) எனும் தூரநோக்கு அவசியம்.
Delete