அமைச்சரவையில் லடாய், ஆத்திரத்துடன் வெளியேறிய ஜனாதிபதி, சமாதானப்படுத்திய பிரதமர்
ஜனாதிபதி செயலகத்தில் இன்று -16- நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் கூட்டத்தின் ஆரம்பத்தில் பிணைமுறி விநியோக ஆணைக்குழு தொடர்பிலும், ஐக்கிய தேசியக் கட்சியை அழிக்க முற்படுவதாக ஐ.தே.க உறுப்பினர்கள் தன்னை விமர்சிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஏற்பட்ட குழப்ப நிலையை அடுத்து ஜனாதிபதி கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் ஜனாதிபதியை பிரதமர் சமாதானப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் சுமார் ஒரு மணித்தியாலயத்திற்கு பின்னர் மீண்டும் அமைச்சரவை கூடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment